வேலையில் சேர்ந்து ஒரு நாள் கூட ஆகலை.. 8வது மாடியிலிருந்து விழுந்து.. இளம் பெண்ணின் பரிதாப முடிவு!
சென்னையில் ஐடி பெண் ஊழியர் 8-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்
Recommended Video
சென்னை: வேலையில சேர்ந்து ஒரு நாள்கூட முழுசா ஆகல.. முதல் நாளே ஐடி பார்க் நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் டெனிதா ஜீலியஸ். 24 வயதாகிறது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பகுதியில் உள்ள தனியார் ஐடி பார்க்கில் வேலை கிடைத்தது.

இதனால், நேற்று வேலையில் சேர்ந்தார். நேற்றிரவு வேலை முடிந்தபிறகு, நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து திடீரென விழுந்து உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசர் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏனெனில் நேற்றுதான் வேலையில் சேர்ந்ததால், இவரை பற்றி ஆபீசில் யாருக்குமே எந்த விவரமும் தெரியவில்லை. உண்மையிலேயே டெனிதா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தவறி விழுந்தாரா என தெரியவில்லை. 8-வது மாடிக்கு அந்த நேரத்தில் ஏன் போனார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் 9வது மாடியில் உள்ள கேன்டீனில் இருந்து, தடை செய்யப்பட்ட மாடிப்படி வழியாக கீழ் தளத்துக்கு இறங்க முயன்ற போது, ஜெனிட்டா தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வேலையில் சேர்ந்த முதல்நாளே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications