தை மாதம் முழுவதும்.. சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தை மாதத்தில், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை தெரிவித்திருக்கிறது.
அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை ரூ.8,000 கோடி கூடுதல் வருவாய் பத்திரப்பதிவுத் துறையில் கிடைத்துள்ளது. அரசு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. எனவே வருவாயை எட்ட பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் பணியாற்ற வசதியாக, இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் யாரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மறுபுறம் சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சாதாரணமாக ஒவ்வொரு நாளும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். ஆனால் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அதிக அளவில் நடக்கும் என்பதால், அந்த நாட்களில் கூடுதலாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சில விடுமுறை நாட்களிலும் கூடு பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால் அந்த நாட்களிலும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன.
கடந்த மாதம் 14ம் தேதி சுபமுகூர்த்த தினம் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டு கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது. அதாவது வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுடன் கூடுதலாக 50 டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடி அதிக அளவு பத்திரப்பதிவும் நடந்திருக்கிறது.
இந்நிலையில், வரும் 15ம் தேதி தை மாதம் தொடங்குகிறது. எனவே, அதிக அளவில் மக்கள் பத்திரப்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த மாதம் முழுவதும் கூடுதல் டோக்கன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் இதனை உறுதி செய்திருக்கிறார்.
இதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications