Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தீவிரமா இருங்க".. கீ கொடுத்த ஸ்டாலின்.. ஆட்டத்தை தொடங்கிய திமுக.. ஆஹா களம் சூடு பிடிக்குதே!

எதிர்க்கட்சிகள் தரப்பில் கொஞ்சம் ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது. ஓபிஎஸ், பாஜக, அமமுக மூலம் பிரிய இருந்த வாக்குகள் எல்லாம் மீண்டும் எடப்பாடி கேம்பிற்கு வந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக திமுக தீவிரமாக பணிகளை தொடங்கி உள்ளது. தேர்தல் களம் கொஞ்சம் மாறியதால் திமுகவும் தங்கள் வேகம் மற்றும் வியூகத்தை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் போட்டியிடுகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது தேர்தல் களமே வேறு மாதிரி இருந்தது.

அதாவது பாஜக போட்டியிடுமா.. போட்டியிடாதா என்ற குழப்பம் இருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளாரை நிறுத்த முயன்று கொண்டு இருந்தது.

 ஓபிஎஸ் தரப்பு

ஓபிஎஸ் தரப்பு

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் நாங்களும் வேட்பாளரை நிறுத்துவோம். இல்லையென்றால் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என்று கூறியது. இன்னொரு பக்கம் அமமுக தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அப்படியே பிரியும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான், தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களத்தில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

வாபஸ்

வாபஸ்

முன்னதாக ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக்கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்துள்ளது. தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது.

 பாஜக நிலைப்பாடு

பாஜக நிலைப்பாடு

பாஜகவும் கூட அதிமுகவின் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி விட்டது. ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது. ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

 ஒரு பக்கம்

ஒரு பக்கம்

இதன் மூலம் எதிர்க்கட்சிகள் தரப்பில் கொஞ்சம் ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது. ஓபிஎஸ், பாஜக, அமமுக மூலம் பிரிய இருந்த வாக்குகள் எல்லாம் மீண்டும் எடப்பாடி கேம்பிற்கு வந்துள்ளது. இதனால்தான் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து உள்ளது. தேர்தல் தொடங்கிய போது இருந்த நிலை இப்போது இல்லை. இப்போது களத்தில் அதிமுகவின் பலம் கொஞ்சம் அதிகம் ஆகி உள்ளது. ஈரோடு மாவட்டம் அதிமுக வலிமையாக இருக்கும் மாவட்டம் என்பதால் இந்த மாற்றம் அந்த கட்சிக்கும் சாதகமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கில் திமுக தரப்பும் வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கிறதாம்.

 தீவிரம்

தீவிரம்

தேர்தல் பணிகள் சரியாக நடக்கவில்லை. ஆங்காங்கே சுணக்கம் இருக்கிறது. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள். வேகமாக பணிகளை செய்யுங்கள். அப்போதுதான் வெற்றிபெற முடியும். சில வார்டுகளில் பணிகள் சரியாக நடக்கவில்லை. எந்ததெந்த அமைச்சர்களுக்கு வார்டுகளை கொடுத்து இருக்கிறோமோ அவர்கள் பணிகளை வேகப்படுத்துங்கள். வீடு வீடாக செல்லுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கீ கொடுத்து இருக்கிறாராம். சீரியஸாக இல்லாத சிலரை அழைத்து.. கொஞ்சம் சீரியஸா இருங்க என்றும் நேரடியாக குறிப்பிட்டு இருக்கிறாராம்.

பணிகள்

பணிகள்

இதையடுத்து ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை திமுகவும் துரிதப்படுத்தி உள்ளதாம். களநிலவரம் நினைத்த மாதிரி இல்லை. 60 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை எடுக்க வேண்டும் என்றால் இன்னும் உழைக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தரப்பு வேகம் காட்ட தொடங்கி உள்ளனராம். ஈரோடு கிழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கி உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் 3-4 வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கே சுமார் 35 வார்டுகள் உள்ளன. இதில் செந்தில் பாலாஜிக்கு வெள்ளாள கவுண்டர்கள் இருக்கும் வார்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தற்போது தேர்தல் நேரத்தில் செய்யும் பணிகள், ஆளும் கட்சி இறக்கும் பவர், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி போன்றவர்கள் இறங்கி வேலை செய்யும் போது வாக்கு 60 சதவிகிதம் வரை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று திமுக திட்டமிட்டுள்ளது. இதில் எங்கேயும் சருக்கிவிட கூடாது என்று தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். ஆளுக்கு 4 வார்டுகளில் வேலை செய்யுங்கள், வாக்கு சதவிகிதம் 60க்கும் மேல் வர வேண்டும் என்று திமுக மேலிடம் தேர்தல் பணியாளர்களுக்கு டார்கெட் விதித்து இருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+