ஐடி ரெய்டு.. வசமாக சிக்கிய ஜெகத்ரட்சகன்.. தொக்காக சிக்கிய ஆவணங்கள்.. தோண்டும் அமலாக்கத்துறை
சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் 6 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெகத்ரட்சகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வருமான வரித் துறை குழு அமைத்துள்ள நிலையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
திமுகவின் பண சுரங்கங்களைப் பார்த்து வருமான வரித்துறையும், அமலாக்கத்துறை கண் வைத்து ரெய்து நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ரெய்டுகளை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர் திமுக எம்.பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள். ரெய்டு வளையத்தில் முதலில் சிக்கியவர் செந்தில் பாலாஜி இவரும் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்தான். அதே போல ஜெகத்ரட்சகன் தற்போது ரெய்டு வளையத்தில் தொக்காக சிக்கியுள்ளார். ஆவணங்கள் பெட்டி பெட்டியாக சிக்கியுள்ளதால் அதிலிருந்து எப்படி தப்பிக்கப்போகிறார் என்றே அவரது ஆதரவாளர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் ஜெகத்ரட்சகன் , பின்னர் ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி நடத்தி வந்த நிலையில் திமுகவில் கடந்த 2008 ஆம் ஆண்டு இணைந்தார். இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் இருந்தார். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, நட்சத்திர விடுதிகள் நடத்தி வருகிறார்.
கல்வித்தந்தையாகவும் தொழில் அதிபராகவும் வலம் வரும் ஜெகத்ரட்சகன் வீட்டிலும் அவரது அலுவலகங்களில் பல முறை வருமான வரித்துறையினர் சோதனை செய்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 6 நாட்களாக ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், மருத்துவமனை. நட்சத்திர விடுதி உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறில் கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அதன் அருகில் உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகத்திலும் தீவிர சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் உட்பட பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.
சோதனையில் 4.5 கோடி ரூபாய் பணம் 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து வெளிநாட்டுக் கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு 2.45 கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
6 நாட்கள் தொடர்ச்சியான நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏராளமான சொத்து பத்திரங்கள், கணக்கில் வராத பணம், பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் உள்ள கம்ப்யூட்டர்,லேப்டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இவற்றை ஆய்வு செய்ய, வருமான வரித் துறையில் 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலனாய்வு பிரிவின் துணை ஆணையர்கள் மூன்று பேர் தலைமையில் இந்த குழுக்கள் செயல்படும்.
ஜெகத்ரட்சகன் வீட்டில் சிக்கிய ஆவணங்களின் நகல்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடக்கிறது. விரைவில் ஜெகத்ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டில், அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அப்போது முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் வருமான வரித்துறை மற்றொரு பக்கம் அமலாக்கத்துறை என இரண்டு பக்கமும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் செய்வதறியாது தவிக்கிறார் ஜெகத்ரட்சகன் எம்.பி.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications