விஜய்க்கு யாருமே உதவவில்லை.. ஜனநாயகன் படத்தை திட்டமிட்டு நிறுத்திட்டாங்க - பிரபலம் பகீர் புகார்
சென்னை: நடிகர் விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு ‛சென்சார்' சான்று கிடைக்காததால் அந்த திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ‛‛ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் திரைப்படத்துறை சார்பாக இத்தனை சங்கங்கள் இருந்தும் ஒருவர் கூட விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்காதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது'' என எழுத்தாளர் சமரன் பரபரப்பை கிளப்பி உள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளார். இந்நிலையில் தான் விஜய் ‛ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாகும். அதன்பிறகு முழுநேர அரசியலில் விஜய் கால்பதிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையொட்டி வரும் 9 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்துக்கான சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ம் தேதிக்கு பதில் வேறு தேதிக்கு திரைப்படம் வெளியாக உள்ளது. திரைப்படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ‛ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரோடக்சன் அறிவித்துள்ளது. இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் தான் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சமரன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. தமிழ்நாட்டில் திரைப்படத்துறை சார்பாக இத்தனை சங்கங்கள் இருந்தும் ஒருவர் கூட விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்காதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக முறைப்படி இதையும் விஜய் எதிர்கொண்டு மீண்டு வந்து தான் ஒரு ஜனநாயகன் என்பதை நிரூபிப்பார். வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.
-
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்! -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி












Click it and Unblock the Notifications