Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் படம் லீக்.. 'அவர்' ஒருவரை தவிர அனைவரும் கண்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் லீக்கானது குறித்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, ஜிவி பிரகாஷ்குமார், நடிகை குஷ்பு, நடிகர் விஷால் என பலரும் கண்டித்துள்ளனர்.. ஜனநாயகன் பட விவகாரத்தை அரசியலாக்க கூடாது.. ஜனநாயகன் படத்தை லீக் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை பலரும் வைத்துள்ளனர். ஆனால் விஜய் மட்டும் ஜனநாயகன் லீக் தொடர்பாக எதுவும் பேசவில்லை.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "ஜனநாயகன் திரைப்படக் கசிவு என்பது ஒரு விபத்தல்ல - அது ஒரு கட்டமைப்புத் தோல்வியின் விளைவு. உரிய நடைமுறைகள் சரியான நேரத்தில் நடந்திருந்தால், நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம். தணிக்கை செய்வதில் ஏற்பட்ட அளவுக்கதிகமான காலதாமதம், திருட்டுத்தனமாகத் திரையிடுபவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிட்டது. சட்டப்பூர்வமான அணுகல் முடக்கப்படும்போது, சட்டவிரோத வழிகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன.

Jana nayagan

திருட்டுத்தனம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது; அது கலை மற்றும் கலைஞன் மீதான நேரடித் தாக்குதல். இது நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பையும், நாம் நேசிக்கும் சினிமாவைத் தாங்கிப் பிடிக்கும் நேர்மையான வரி செலுத்தும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் முதலீட்டையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.

அமைப்பே தோல்வியடையும் போது, படைப்பாளனை யார் பாதுகாப்பார்கள்? நமக்குத் தேவை பொறுப்புக்கூறல், விரைவான தணிக்கை முறை, கடுமையான அமலாக்கம் மற்றும் உடனுக்குடனான தடுப்பு நடவடிக்கைகள். சினிமாவை உண்மையாக நேசிப்பவர்கள் ஒன்றிணைந்து, கடந்த காலங்களில் எனக்குத் துணையாக நின்றது போலவே, இப்போதும் இப்படத்தைத் திரையரங்குகளில் சட்டப்பூர்வமாகப் பார்த்து இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்." இவ்வாறு கமல்ஹாசன் கூறியிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த வெளியிட்டிருந்த பதிவில், "ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது" இவ்வாறு நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருந்தார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "இதயத்தை நொறுக்குவதாகவும், அநீதியானதுமாகவும் இருக்கிறது - ஒரு முழு குழுவின் உழைப்பும் ஆர்வமும் இப்படி வீணடிக்கப்பட்டுவிட்டதே. உங்கள் அனைவரிடமும் நேர்மையுடன் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், தயவுசெய்து அந்தத் திரைப்படத்தை இங்கே பார்க்கவோ, பகிரவோ அல்லது அதைப் பற்றி விவாதிக்கவோ வேண்டாம். அவர்களின் உழைப்பிற்கு மதிப்பளியுங்கள். எனது நண்பர்களின் பக்கம் நான் நிற்கிறேன், இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாத ஒன்று!" என்று சூர்யா கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்

திரைத்திருட்டை ஆதரிக்காதீர்கள். திறமையையும் கடின உழைப்பையும் மதியுங்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஏகப்பட்ட ரத்தமும் வியர்வையும் சிந்தப்படுகிறது. வேதனைக்குரியது என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறினார் .

நடிகை குஷ்பு

திருட்டுப்பிரதி என்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு திட்டமிட்ட திருட்டு. அதில் ஈடுபடுபவர்கள், எந்தக் குற்றவாளிக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. மற்ற குற்றங்களைப் போலவே அவர்களும் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

நடிகர் விஷால்

ஜனநாயகம் படத்தின் லீக் வீடியோக்களை பார்க்கும்போது மிகவும் மனம் உடைகிறது. இவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு, முயற்சி எல்லாம் வீணாகும் போல தோன்றுகிறது என்று நடிகர் விஷால் கூறினார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் கூறும் போது, ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொருவரின் ஆசை, ரத்தம், வியர்வையில் உருவாகிறது. தயவு செய்து இணையதளத்தில் வெளியான பிரதியை தவிர்க்கவும்.. திரையரங்கில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கு பார்த்து ரசியுங்கள்.. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விஜய் தேவரகொண்டா

ஜனநாயகன் திரைப்படம் கசிவு எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனது ஆரம்பகால வாழ்க்கையில் இத்தகைய இழப்பை நானும் அனுபவித்து இருக்கிறேன். குற்றவாளிகளை உடனடியாக கண்டறியத் தவறினால் அது ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வி.. இது பலரின் கனவுகளை அழிக்கும் செயல் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறினார்.

நடிகர் சரத்குமார்

"ஜனநாயகன் பட விவகாரத்தை அரசியலாக்க கூடாது.. ஜனநாயகன் படத்தை லீக் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்" என்றார்.

நடிகர் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி கூறுகையில், இது போன்ற செயல்கள் ஒட்டுமொத்த திரைத்துறையும் பாதிக்கும்.. சினிமா என்பது பலரின் நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் கூட்டு கனவால் உருவானது.. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் படைப்பாளிகளின் உழைப்பை மதித்து திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+