Jana Nayagan: முடங்கி கிடக்கும் ஜனநாயகன்! சென்சார் போர்டு நாளை எடுக்கும் முக்கிய முடிவு? விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்தை சென்சார் போர்டு மறு ஆய்வு குழு நாளை பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒருவேளை நாளையும் படம் பார்க்க முடியாமல் போனால், வரும் 19 ஆம் தேதி படம் பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே படத்தை மறு ஆய்வுக் குழு பார்க்க இருந்த நிலையில், குழுவில் உள்ள ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தள்ளிப்போயிருந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் திட்டமிட்டப்படி படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. தற்போது வரை படம் வெளியாகாமல் உள்ளது.

சென்சார் பிரச்சனையில் ஜனநாயகன் திரைப்படம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்று கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் போனது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கடந்த ஜனவரி 9 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்ட நிலையில், தணிக்கை வாரியம் படத்தை மறுதணிக்கை செய்ய முடிவு செய்தது.
ஆனால் இதனை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் தனி நீதிபதி பிடி ஆஷா, படத்திற்கு உடனே யுஏ சான்று வழங்க வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார். உடனடியாக இதை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ததோடு, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் மூலமாக தீர்வை நாடினால் கால தாமதம் ஏற்படும் என்று கருதிய ஜனநாயகன் படக்குழு சென்சார் வாரியத்திடம் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது. மறு ஆய்வு குழு படத்தினை 45 நாட்களுக்குள் பார்த்து சான்று அளிக்கும் என கூறப்பட்டது.
இதனால் ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்றே உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. படம் ரிலீஸாகும் என காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கும் இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை சென்சார் போர்டு மறு ஆய்வு குழு ஜனநாயகன் படத்தை பார்த்து சான்று அளிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
19 ஆம் தேதிக்குள் சென்சார் சான்று?
இதனால் விஜய் ரசிகர்களும் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் விஜய் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக படத்தை பார்க்கும் மறு ஆய்வு குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் படம் பார்ப்பதை மறு ஆய்வு குழு தள்ளி வைத்தது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் தான் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக சென்சார் போர்டு மறு ஆய்வு குழு ஜனநாயகன் படத்தை நாளை பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு வேளை நாளையும் படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டால் வரும் 19 ஆம் தேதி படத்தை பார்த்து சென்சார் சான்று வழங்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பு வெளியாகுமா?
இதனால் வரும் 19 ஆம் தேதிக்குள் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பு படம் வெளியாகுமா எனவும் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும், படத்தின் நடிகர் விஜய்யின் கட்சி போட்டியிடுவதாலும், தேர்தல் ஆணையத்திடம் படக்குழு அனுமதி பெற வேண்டியிருக்கும்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் ரிலீஸ் செய்ய சொன்னால் மட்டுமே படம் வெளியாகும். இல்லை என்றால் தேர்தல் நடந்து முடிந்த பிறகு படம் வெளியாகும்.
-
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட் -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள் -
விஜய் அவரது குழந்தையை கைவிடமாட்டார்.. திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க ஆதவ் அர்ஜுனா ஐடியா -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல! -
புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் வரை.. விஜயால் மோசம்போன வேட்பாளர்கள்.. தவெகவில் கடும் அதிருப்தி -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
நேர்ல வரலனாலும் நேராகவே பேசுறாரே! ஹாலோகிராமில் கும்பகோணத்தை அதிரவைத்த AI விஜய்












Click it and Unblock the Notifications