திமுக ம.ம.க. கூட்டணிக்கு அச்சாரம் போட்டவர் டாக்டர் மஸ்தான்! மறக்க முடியுமா! ஜவாஹிருல்லா இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மனிதநேய மக்கள் கட்சி இடையேயான நட்பில் தொய்வு ஏற்பட்ட காலத்தில் அந்த நட்பை மீண்டும் தொடர பெரும் முயற்சி எடுத்தவர் டாக்டர் மஸ்தான் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

மஸ்தானின் பெரும் முயற்சியால் அன்று கருணாநிதியை தாம் நேரில் சந்தித்து நட்பு பாராட்டியதாகவும் அது இன்றும் தொடர்வதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

இன்று மாலை மஸ்தான் இல்ல நிச்சயதார்த்த விழா நடைபெறவிருந்த நிலையில் அவரது மறைவு தனக்கு பேரதிர்ச்சியை தருவதாக ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு விவரம் வருமாறு;

மாலை மகனுக்கு நிச்சயதார்த்தம்

மாலை மகனுக்கு நிச்சயதார்த்தம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இன்று மாலை அவரது இல்ல திருமண நிகழ்வு ஒன்று நடைபெற இருந்த நிலையில் அவர் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்று செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது.

திமுக மமக கூட்டணி

திமுக மமக கூட்டணி

ஆரம்பம் முதல் தமுமுகவும் திமுகவும் நெருக்கமாக இருந்த நிலையில் இடையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக திமுகவுடன் நட்பு தொடர முடியாத நிலையில் மீண்டும் அந்த நட்பு தொடர பெரிதும் முயற்சி எடுத்தவர் மருத்துவர் மஸ்தான் அவர்கள். அவரின் முன்முயற்சியால் முரசொலி அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை சந்தித்து நட்பு பாராட்டப்பட்டு அது இன்றும் தொடர்கிறது.

இப்தார் விருந்து

இப்தார் விருந்து

சேப்பாக்கம்-திருவெல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வெற்றிக்காக பம்பரமாகச் சுழன்று களப் பணியாற்றிவர் மருத்துவ மஸ்தான் அவர்கள். சென்ற ரமலானில் திமுக சார்பில் நடத்தப்பட்ட ரமலான் இப்தார் விருந்து நிகழ்ச்சியை பிரமிக்கத்தக்க வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்து வியக்கவைத்தவர்.

உயரிய சுவனம்

உயரிய சுவனம்

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் மஸ்தான் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உயரிய சுவனத்தை வழங்க பிரார்த்திக்கின்றேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+