"ரத்தக்கறை".. பாஜக பிளானை புட்டு புட்டு வைத்த ஜவாஹிருல்லா.. டக்கென திரும்பும் டெல்லி

ஜவாஹிருல்லா, பாஜகவை கடுமையாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆக்கிவிட்டால் அவர்கள் வாழ்வியல் மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துவிட்டதாக அர்த்தமா? என்று மூத்த தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த முறை, உபி மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின பிரதிநிதியான ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக்கியது பாஜக...

இது உபியில் கணிசமாக உள்ள பட்டியலின மக்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக திருப்ப கைகொடுத்ததாக அக்கட்சி தலைமை பெரிதும் நம்பியது..

செம பிளான்

செம பிளான்

அதே போன்ற ஒரு கணக்கைதான் இந்த முறையும் கையில் எடுத்துள்ளது.. விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் வர போகிறது.. இந்த பதவிக்கு பாஜக திரௌபதி முர்மு என்ற ஒடிசா மாநிலத்தைச் சேந்த பழங்குடியின தலைவரை முன்னிறுத்தி உள்ளது.. இவரை குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் அடுத்து வரும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்பதே பாஜகவின் பிளானாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

இந்நிலையில், பாஜகவின் இந்த வேட்பாளர் அறிவிப்பு குறித்து, ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.. மதுரை அவனியாபுரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் அவர் சொன்னதாவது: "2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமை அடிப்படையில் உதவிகள் செய்த கீஸ்டா செட்டில் வால்டு உள்ளிட்டோர் பாசிசப் போக்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர்..

ரத்தக்கறை

ரத்தக்கறை

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.. பாஜக ஆட்சி என்றாலே, அது காட்சிப்பொருள் என்றுதான் அர்த்தம்... காட்சிப் பொருள்களாக சிலவற்றை காட்டிவிட்டு தங்கள் கொடுங்கோன்மையை காட்டுவதுதான் பாஜகவின் வழக்கமான திட்டம். பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆக்கிவிட்டால் அவர்கள் வாழ்வியல் மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துவிட்டதாக பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

கூடா நட்பு

கூடா நட்பு

வட இந்தியா மற்றும் ஜார்கண்ட் பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.. மேனாமினுக்கி தனமாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நாடக காட்சியை பாஜக காட்டிக்கொண்டு உள்ளது... அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம்.,.. பாஜகவோடு கூடா நட்பு வைத்ததால் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கிய கட்சிக்கு இத்தகைய அவல நிலைக்கு தள்ளி விட்டது.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

தற்போது நாட்டில் வேலையின்மை தலைவிரித்து ஆடுகிறது... லட்சக்கணக்கில் வேலையை தருவோம், 15 லட்சம் வங்கி கணக்கில் போடுவோம் என்ற வாக்குறுதி போலவும், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அக்னிபாத் திட்டம் என்கிற ஒன்றை கொண்டு வந்துள்ளனர். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வன்முறையை கட்டவிழ்த்து விட கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அக்னிபாத் திட்டம். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சர்வாதிகாரிகள் வெல்ல போவதில்லை, ஜனநாயகம் வெல்லும்.. பாஜக நிச்சயம் வெல்ல முடியாது" என்றார்.. பாஜகவின் ஒவ்வொரு செயல்பாட்டையும், ஜவாஹிருல்லா விமர்சித்து, கேள்வி எழுப்பிய நிலையில், அக்கட்சி தலைவர்களுக்கு எரிச்சலை ஊட்டி வருகிறதாம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+