Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விரக்தி.." அதிமுகவை உடைத்ததே ஜெயக்குமார் தான்.. ஐட்ரீம் மூர்த்தி பரபர! அப்போ காரணம் 'அவர்' இல்லையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக இப்போது இரு பிரிவுகளாகப் பிளவுபட்டு இருக்கும் சூழலில், திமுக ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி பரபர கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

சென்னை காசிமேடு மீன் ஏலக்கூடத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக வடசென்னை தீயணைப்புத் துறையினரால் ஒத்திகை மீட்புப் பணி நிகழ்ச்சி நடைபெற்றது

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி கலந்து கொண்டார்.

 ஒத்திகை

ஒத்திகை

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மெரினா நீச்சல் வீரர்கள், தீயணைப்புத் துறையினரோடு இணைந்து வீட்டில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், டயர்களை வைத்து பேரிடர் காலங்களில் எப்படி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை விளக்கும் வகையில் ஒத்திகை நடத்தினர். மேலும் கடலில் யாரேனும் தவறி விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினர்.

 ஐட்ரீம் மூர்த்தி

ஐட்ரீம் மூர்த்தி

கடலில் தவறி விழும் பொதுமக்களைத் தீயணைப்பு படையினர் மீட்புப் படையினர் என எப்படி எல்லாம் மீட்கிறார்கள் என்பதை அவர்கள் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 படுதோல்வி

படுதோல்வி

செய்தியாளர்களிடம் பேசிய ஐட்ரீம் மூர்த்தி, "போஜராஜன் நகர் குறித்து ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அங்குக் கட்டப்பட்டுள்ள சுரங்கம் வழியாக ஜெயக்குமார் செல்வாரா? கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயக்குமார் தோல்வி அடைந்தார். தோல்வி என்றால் சில நூறு வாக்கு வித்தியாசத்தில் இல்லை. 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் படுதோல்வி அடைந்துள்ளார். அதுவும் ராயபுரத்திலேயே அவர் தோல்வி அடைந்தார்.

 உடைத்ததே ஜெயக்குமார் தான்

உடைத்ததே ஜெயக்குமார் தான்

இந்தத் தோல்வி காரணமாக ஜெயக்குமார் மனவலியுடன் மனக்குழப்பத்திற்கும் ஆளாகியிருக்கிறார். எப்படியாவது தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என்று நினைத்தார் அவர். இதற்காகவே அவர் காய் நகர்த்தினார். இருப்பினும், அதுவும் அவர் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் அதிமுகவை இரண்டாக உடைத்துவிட்டார். இதன் காரணமாக அக்கட்சி தொண்டர்களே அவர் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர்" என்று பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நடவடிக்கை

நடவடிக்கை

மேலும் ராயபுரம் பகுதிகளைப் பொறுத்தவரைத் தீயணைப்பு மீட்பு படைவீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக ஐட்ரீம் மூர்த்தி தெரிவித்தார். இருப்பினும், இந்த அளவுக்கு மோசமான பாதிப்பு தற்போது ஏற்பட வாய்ப்பில்லை என்றும் மழைநீர் கணுக்கால் அளவிற்கு மேலிலிருந்தால் கூட அவை உடனடியாக அகற்றப்படும் என்றும் ஐட்ரீம் மூர்த்தி தெரிவித்தார்.

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்

அதிமுக இப்போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தலைமையில் இரு பிரிவுகளாக இயங்கி வருகிறது. ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி தரப்பினர் கூறி வரும் நிலையில், கட்சியின் வளர்ச்சிக்குக் கூட்டுத் தலைமையே சரியானதாக இருக்கும் என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இதில் முதல்முறையாக சில மாதங்களுக்கு முன்பு கட்சிக்கு ஒற்றை தலைமை தான் தேவை என்பதை வெளிப்படையாகச் சொன்னவர் ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+