எல்லா ஏரியாவுலேயும் குட்டு.. பேசாம ஓபிஎஸ் இனி சினிமாவில் நடிக்க போகலாம்.. ஐடியா கொடுத்த ஜெயக்குமார்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் இனிமேல் சினிமாவுக்கு நடிக்க போகலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகப் பேசியுள்ளார். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், ஓபிஎஸ் தரப்பு தொடர் பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில் எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஓபிஎஸ் கோஷ்டியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல உண்மை, தர்மம், நியாயம் வென்றுள்ளது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் கொண்டாடும் மகிழ்ச்சியான தீர்ப்பு இது. தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்றங்களால் ஓபிஎஸ் தரப்பினர் குட்டு வாங்கியுள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே ஓபிஎஸ் கோஷ்டி மானம் உள்ளவர்களாக இருந்தால் அதிமுக கரை வேட்டி கட்டக்கூடாது. கொடியை பயன்படுத்தக் கூடாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் வைத்த பேனர்களை பயன்படுத்தக்கூடாது. எனவே ஓபிஎஸ் இனிமேல் சினிமாவுக்கு நடிக்க போகலாம்.

மேலும் இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவின் வண்ணங்களை பயன்படுத்துவது சட்டத்தை மீறும் செயல். இது மானம் இல்லாதவர்கள் தான் செய்வார்கள். உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை உறுதிப்படுத்தி உள்ள நிலையில், மேல்முறையீடுக்கு அவர்கள் எங்கு சென்றாலும் நியாயம் தர்மம் நீதி நிலைநாட்டப்படும்" எனக் கூறியுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications