Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவி மலைக்குறவரின் உயிரிழப்புக்கு அரசும், அதிகாரிகளும் தான் பொறுப்பு.. கொந்தளித்த ஜெயக்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிர் இழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மலைக்குறவர் இனத்தை சேர்ந்த தங்களுக்கு, எங்குமே சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை, தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்தார்.

இதையடுத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 90 சதவிகித படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சாதிச் சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்; அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளிப்பு

ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளிப்பு

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலினின் கையாலாகாத ஆட்சியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் 11.10.2022 அன்று அதிகாரிகள் தனது மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 12.10.2022 அன்று காலை உயிரிழந்துள்ளார்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு, நரிக்குறவர் வீடு, தாழ்த்தப்பட்டோர் வீடு என்று செல்வதும், தான் உடன் எடுத்துச் சென்ற சாப்பாட்டை அவர்களுடன் சாப்பிட்டு போட்டோ ஷூட் நடத்துவதும், இப்படி செய்வதாலேயே அந்த மக்களின் வாழ்வு வளம் பெற்றுவிட்டது என்று பகல் கனவு காணும் முதலமைச்சரைப் பெற்றிருப்பது நம் மக்களின் தலையெழுத்து. சில மாதங்களுக்கு முன்பு, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு சுயதொழில் புரிய கடன் தருவதாகக் கூறி போட்டோ ஷூட் நடத்தினார் முதலமைச்சர்.

அதிகார வர்க்கத்தின் அலட்சியம்

அதிகார வர்க்கத்தின் அலட்சியம்

ஆனால், கூறியபடி கடன் வழங்கப்படாததால் அந்தப் பெண் கொடுத்த பேட்டி அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்ததை அனைவரும் அறிவார்கள். 11.10.2022 அன்று வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு ஜாதிச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து, அச்சான்றிதழ் அரசு அதிகாரிகளால் வழங்கப்படாததால், மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார். முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும் என்பதுபோல், அப்பாவி மக்களைப் பற்றி இன்றைய அரசின் ஆட்சியாளர்களைப் போலவே, அதிகார வர்க்கமும் அலட்சியமாக இருப்பது வேதனைக்குரியது.

 பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்

"பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், முருங்கை மரத்தில்தான் குடித்தனம் நடத்தவேண்டும்" என்ற நிலையில் திமுக-விற்கு வாக்களித்த தமிழக மக்கள் இந்த விடியா திமுக ஆட்சியில் திணறிக் கொண்டிருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்துதான் எந்த ஒரு சான்றிதழும் பெற முடியும் என்ற நிலைக்கு மக்களை இந்த விடியா அரசு தள்ளி இருக்கிறது. மகனின் ஜாதிச் சான்றிதழுக்காக தன் இன்னுயிரை தீந்தணலுக்கு பலியிட்ட அப்பாவி மலைக்குறவரின் செயலுக்கு இந்த அரசும், அதிகாரிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும். நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு நன்மை செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் முதலமைச்சர், ஜாதிச் சான்றிதழ் பெற முடியாமல், விலைமதிக்க முடியாத உயிரை நீத்த மலைக்குறவர் குடும்பத்திற்கு என்ன சொல்லப் போகிறார்?

நியாயம் கிடைக்க வேண்டும்

நியாயம் கிடைக்க வேண்டும்

சாதிச் சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+