டிசம்பர் 4, 2016 அன்று ஜெயலலிதா அறையில் சலசலப்பு.. உதவியாளர் பூங்குன்றன் சாட்சியம்.. நடந்தது என்ன ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டதாக அவருடைய உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து ஆறுமுகசாமி அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 600 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் யார் யாரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது, ஜெயலலிதாவுக்கு முன்னுரை, சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்து விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 158 பேரிடம் இந்த கமிஷன் விசாரணை நடத்தியது. சுமார் 5 ஆண்டு கால விசாரணையில் ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விவரமாக தெரியவில்லை.

 ஜெயலலிதா உதவியாளர்

ஜெயலலிதா உதவியாளர்

அந்த வகையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறையில் சலசலப்பு ஏற்பட்டது என கூறியிருந்தார்.

 மதியம் 2 மணிக்கு

மதியம் 2 மணிக்கு

அது போல் அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு பணிக்கு வந்த அப்பல்லோ மருத்துவமனை செவிலியர் மகேஸ்வரி கூறுகையில், தான் மதியம் 2 மணிக்கு பணிக்கு வந்ததாகவும் அப்போது ஜெயலலிதா அவர்களின் அறைக்கு சென்ற போது அவர் தொலைக்காட்சியை அணைக்க சொன்னார். சிறிது நேரம் கழித்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதய செயலிழப்பு

இதய செயலிழப்பு

அது போல் அன்றைய தினம் பிற்பகல் 3.50 மணிக்கு முன் எக்கோ எடுக்கும் படி நளினி என்பவர் கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறினார். ஆனால் எந்த நேரத்தில் இதய செயலிழப்பு ஏற்பட்டது என அவருக்கு தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க சசிகலா தடுத்தார் என ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.

அரசியல் வட்டாரம்

அரசியல் வட்டாரம்

சுருக்கமாக சொல்ல போனால், ஜெயலலிதாவுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றே ஆணையம் கூறுகிறது. அவருக்கு சரியான சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+