ஜெயலலிதா டு ஸ்டாலின்! மாற்றிய ஆட்சி; மாறாத காட்சி? 10 ஆயிரம் கோடி என்னாச்சு?
சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு தமிழக போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதான் சமீபத்திய அப்டேட் நியூஸ்.
ஆனால், போக்குவரத்து தொழிலாளர்கள் ஏன் ஒவ்வொரு பொங்கல் பண்டிகை நேரத்திலும் போராட்டத்தில் குதிக்கிறார்கள்? மக்கள் படும் துயரத்தை அவர்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை.

இப்படித்தான் பொதுவாகப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஏதோ அரசு தரப்பு நியாயமாக நடந்துகொள்வதைப் போலப் பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
மாதாமாதம் தனக்குக் கிடைக்க வேண்டிய 6 ஆயிரம் ரூபாய் பஞ்சப்படியை பல ஆண்டுகளாக இழந்து வருகிறார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் என்பது எத்தனைப் பேர் அறிவார்கள்?
எதிர்க்கட்சி வரிசையிலிருந்த போது பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய ஸ்டாலின், முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததும் அப்படியே மறந்துவிட்டார் என்கிறார்கள் தொழிலாளர்கள்.
உண்மையில் யார் பக்கம் நியாயம் உள்ளது. ஏன் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் போராட்டம் நீண்டு கொண்டுள்ளது?

தினம் 6 ஆயிரம் பேருந்துகள் ஓடவில்லை:
அனைத்திற்கும் விளக்கம் தருகிறார் சிஐடியூ மாநிலத் தலைவர் செளந்தர்ராஜன், "அரசு கல்லூரி மற்றும் பள்ளி பிள்ளைகளுக்கு இலவசமாகப் பேருந்தை இயக்குகிறது. கூடவே மகளிருக்கு இலவசம் என்று அறிவித்திருக்கிறார்கள். இதில் வேறு சில சேவைகளும் இலவசத்தில் நடைபெறுகின்றன.
வருமானம் மற்ற வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை வளரும் சமூகத்தில் தேவைப்படும். 500 குடும்பங்கள் உள்ள ஊர்களுக்கு பஸ் விட்டுத்தான் ஆகவேண்டும். அது லாபத்தில் இயக்காது. அரசுக்கும் இது தெரியும். வருமானமற்ற வழித்தடங்களில் தனியார் நிறுவனங்கள் பேருந்தை இயக்காது. அரசுதான் இயக்க வேண்டும்.
இவைதான் வருமான குறைவுக்குக் காரணங்கள். ஆனால், இந்த வருமான இழப்பு என்பதாக அரசு பார்க்க முடியாது. அதன் பலன் பல்வேறு வழிகளில் அரசுக்குத் திரும்ப வந்துகொண்டுள்ளது.
ஒரு கிராமத்திலிருந்து ஒருவர் இலவசமாகப் பயணித்து வேறு இடத்திற்கு வந்து வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்புகிறார். அவரது வருமானம் வேறு வழியில் அரசுக்குப் போய்ச் சேருகிறது.

அப்படித்தான் ஒரு மாணவன் கல்லூரிக்கு வந்து படித்துவிட்டுச் செல்கிறான். அவர் படித்து முடித்ததும் பணிக்குச் செல்கிறான். அவனது வளர்ச்சி மூலம் சமூகம் வளர்கிறது. கூடவே அரசும் மறைமுகமாகப் பலனடைகிறது. அப்படித்தான் இதை நாம் பார்க்க வேண்டும். போக்குவரத்துத்துறை என்பதே சேவைத் துறைதான்.
ஆகவே, இந்தத்துறை அரசுக்கு நேரடியாக லாபமாக உள்ளதா? இல்லையா என்று பார்க்கக் கூடாது.
அப்படி என்றால் இங்குக் கிடைக்கின்ற வருமானத்திற்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியை அரசு ஈடுகட்ட வேண்டும். பொதுத்துறை என்பதால் டீசல் விலையைக் குறைப்பதில்லை. வரியைக் குறைத்துக் கொள்வதில்லை. வேறு எந்த உதவியையும் செய்ய மாட்டோம் என்று அரசு பேசினால் அது எப்படிச் சரியாக இருக்கும்?
ஆகவே, இந்தச் சுமைகள் எல்லாம் தொழிலாளிகள் மீது சுமத்தப்படுகிறது என்பதே இங்கே பிரச்சினை. அந்தச் சுமையைத் தொழிலாளிகள் ஏன் சுமக்க வேண்டும்.

தொழிலாளிகளிடமிருந்து பிடித்த பி.எஃப் பணம் , கிராஜுவிட்டி பணம், எல்.ஐ.சிக்காக பிடித்த பணம், சொசைட்டிக்காக பிடித்த பணம் என எதையும் உரிய இடத்தில் கட்டாமல் போக்குவரத்து நிர்வாகமே கையில் வைத்துக் கொண்டு செலவழித்து வருகிறது.
தொழிலாளி பணத்தை செலவழித்த அரசு:
இப்படி கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்துவிட்டார்கள். அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். தொழிலாளி பணத்தை எடுத்து இன்னொரு பக்கம் செலவழித்துவருகிறார்கள்.
இது மட்டுமல்ல; கடந்த 8 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற தொழிலாளிகளுக்குக்கூடப் பஞ்சப் படியைத் தராமல் இருக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சப்படி தொகையானது உயர்த்தப்படும். அப்படி உயர்த்தப்படும் தொகையைத் தொழிலாளிக்கு வழங்குவதில்லை.
அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் சராசரியாக 6 ஆயிரம் ரூபாய் குறைவு ஏற்பட்டுள்ளது.

அடுத்தபடியாக போக்குவரத்துத் துறையில் உள்ள மற்றொரு பிரச்சினை, பணி இடங்கள் நிறைய காலியாக உள்ளன. ஏறக்குறைய 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை அரசு நிரப்பாமல் வைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நிரப்பவே இல்லை. இதனால் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதன் விளைவு என்ன தெரியுமா? ஆள் பற்றாக்குறையால் பேருந்துகள் சரியாக ஓடவில்லை. ஒருநாளைக்கு 6 ஆயிரத்துக்கும் மேலான பேருந்துகள் இயக்கப் படாமல் உள்ளன. சென்னையில் மட்டும் 900 பேருந்துகள் தினம் இயக்கப் படாமல் இருக்கிறது. ஏன் ஓடவில்லை. ஆள் பற்றாக்குறை. அதனால் ஓடவில்லை.
இருப்பதிலேயே பெரிய கொடுமை என்னவென்றால், இறந்துபோனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இதுவரை வழங்கப்படவில்லை.
"வசூலான பணத்தை ஒரு மணிநேரத்தில் ஓட்டுநர் கவுண்டரில் கொண்டுபோய் கட்டவில்லை என்றால் அவர் மீது நடவடிக்கை பாயும். ஆனால், போக்குவரத்துத் துறை வசூல் செய்த பிஎஃப், கிராஜுவிட்டி, எல்.ஐ.சி பணத்தை கட்டாமலே வைத்துள்ளது.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அநியாயம்? இந்த அட்டூழியத்தைத் தட்டிக் கேட்க ஆளே கிடையாதா?" என்று எடுத்த எடுப்பிலேயே பாய்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.

ஜெயலலிதா டு ஸ்டாலின் எந்த மாற்றமும் இல்லை!
தொடர்ந்து பேசிய அவர், "2011இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலம் முழுவதும் இந்தத் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். அதில் பல தொழிலாளர்கள் பஞ்சப்படி கிடைக்காமல், ஓய்வூதியம் கிடைக்காமல் செத்தே போனார்கள்.'
அப்போது ஸ்டாலின் என்ன சொன்னார்? 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றுவோம்' என்றார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், ஒரு கோரிக்கையைக் கூட இதுவரை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. அதுதான் உண்மை.
96 ஆயிரம் பேர் ஓய்வுபெற்றுள்ளார்கள். அதில் பஞ்சப்படி பயணப்படி வாங்காமல் 6 பேர் இறந்துபோய் விட்டார்கள்" என்கிறார்
இந்தப் பேருந்து பற்றாக்குறையால் இரண்டு பேருந்தில் பயணிக்க வேண்டிய கூட்டம் ஒரு பேருந்தில் பயணிக்கிறது. அதனால் பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகமாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் இந்தப் பஞ்சப்படி, பிஎஃப் பணம் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக இவர்களும் கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சியின்போது நாங்கள் போராட்டம் நடத்திய போது திமுக எங்களுடன் சேர்ந்து போராடியது.
இதே ஸ்டாலின் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவர், 'அதிமுக ஆட்சி கொடுக்காது. நான் வந்ததும் தருவேன்' என்றார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் ஸ்டாலினும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சின்ன அசைவு கூட இல்லை" என்கிறார்
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications