ஜெயலலிதா மரணம்: முதல்வர் ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை வழங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி ஆணையம், இன்று அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்கிறது
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், இன்று காலை தன்னுடைய இறுதி அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது.
சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை, நீதிபதி ஆறுமுகசாமி முதல்வர் முக ஸ்டாலினிடம் இன்று நேரில் வழங்குகிறார்...
சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது..

ஹைகோர்ட்
இந்த சூழலில் தான் 90 சதவீத பணிகள் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவர்களின் வாக்குமூலத்தை தவறாக மொழியாக்கம் செய்து பதிவு செய்வதாக கூறி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். ஆனால் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஹைகோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது.. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டுக்கு சென்ற அப்பல்லோ மருத்துவமனை ஆறுமுகசாமி, விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது.

வாக்குமூலங்கள்
இதன் காரணமாக சுமார் 2 வருடங்கள்எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் ஆணையம் முடங்கிவிட்டது.. பிறகு, சுப்ரீம்கோர்ட் இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு அமைத்து ஆணையம் தன்னுடைய விசாரணை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இதற்கு பிறகுதான், நீதிமன்ற உத்தரவின்படி டாக்டர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது... பின்னர் இறுதியாக ஓ.பன்னீர்செல்வம், ஆணையத்தில் தன்னுடைய வாக்குமூலங்களை தந்தார்.. பல டாக்டர்களிடமும் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது.

டாக்குமெண்ட்கள்
இதைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவுவதற்காக, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.. அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

500 பக்கங்கள்
இந்தநிலையில், ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த 2017-ல் செப்டம்பரில் அமைக்கப்பட்டு 5 வருடங்கள் விசாரணைக்கு பிறகு, அறிக்கையை தாக்கல் செய்கிறது... சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தன்னுடைய அறிக்கையை முதல்வர் முக ஸ்டாலினிடம் வழங்குகிறார்... தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ள சுமார் 600 பக்கங்கள் கொண்டது இந்த இறுதி அறிக்கையாகும்.. முன்னதாக, ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது..

ஆறுமுகசாமி
3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 14 முறை ஆணையத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. அது மட்டுமல்ல, இந்த ஆணையம் அமைக்க காரணமாக இருந்ததே ஓபிஎஸ்தான் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், எய்ம்ஸ் மருத்துவ குழு மருத்துவ சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்று ஏற்கனவே அறிக்கை அளித்திருப்பதால், இன்று ஆறுமுகசாமி எவ்வாறான அறிக்கையை தமிழக அரசுக்கு கொடுக்க போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

ஆறுமுகசாமி
3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 14 முறை ஆணையத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.. அது மட்டுமல்ல, இந்த ஆணையம் அமைக்க காரணமாக இருந்ததே ஓபிஎஸ்தான் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், எய்ம்ஸ் மருத்துவ குழு மருத்துவ சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்று ஏற்கனவே அறிக்கை அளித்திருப்பதால், இன்று ஆறுமுகசாமி எவ்வாறான அறிக்கையை தமிழக அரசுக்கு கொடுக்க போகிறார்? என்கிற எதிர்பார்ப்பும் எகிறி வந்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலினை,தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, 590 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி..

விசாரணை அறிக்கை
முன்னதாக, ஆணையத்துக்கு தமிழக அரசு அளித்த அவகாசம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அறிக்கை தாக்கல் செய்ய நேரம் கேட்கப்பட்டிருந்தது.. ஆனால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 23-ம் தேதி இரவு கோவை புறப்பட்டு சென்றார்.. முதல்வரின் இந்த சுற்றுப்பயணத்தால், விசாரணை அறிக்கை அப்போது சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது உடனடியாக தெரியவில்லை.. ஆனால், விரைவில் கூட்டப்படும் சட்டப்பேரவையில், தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications