காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை. வெளிப்படைத்தன்மையுடன் தொகுதி தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது; காங்கிரஸ் நலன் முழுவதும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்ப்பது வேதனையாக உள்ளது. விற்பனை அணுகு முறையோடு வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழகத்தில் காங்., யாராலும் காப்பாற்ற முடியாது'' என திடீரென்று கரூர் எம்பி ஜோதிமணி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

jothimani-says-they-are-selling-off-the-congress-party-for-their-own-gain-after-seat-sharing-wit

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்த முறை ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கோரியதால் திமுக கூடுதலாக 3 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியது. இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் தொகுதி பங்கீடு

இந்நிலையில் தான் முதற்கட்டமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பொன்னேரி (தனி), வேளச்சேரி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), ஈரோடு கிழக்கு, உதகை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

மீதமுள்ள, 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை பிற கட்சிகளும் கேட்பதால் 12 தொகுதிகளில் இழுபறி நீடித்து வருகிறது. அநேகமாக நாளை காலைக்குள் திமுக, காங்கிரஸ் கட்சிக்கான தொகுதியை இறுதி செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஜோதிமணியின் காட்டமான பதிவு

இந்நிலையில் தான், இன்று மாலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை மொத்தம் 25 தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட்டன. இன்னும் 3 தொகுதிகள் மட்டும் தான் பெண்டிங்கில் உள்ளது என்றார். இப்படியான சூழலில் தான் திடீரென்று கரூர் எம்பி ஜோதிமணி எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், '' காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது.

கட்சியை காப்பாற்ற முடியாது

நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது.

பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது'' என்று கூறியுள்ளார்.

செல்வபெருந்தகை மீது அட்டாக்?

ஜோதிமணியின் இந்த பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஜோதிமணி இந்த பதிவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகையை தான் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளதாக நெட்டிசன்கள். செல்வபெருந்தகை விசிகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் செல்வபெருந்தகை திமுகவின் கூட்டணியை விரும்பினர். ஆனால் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டவர்கள் செல்வபெருந்தகையின் எண்ணத்துக்கு எதிராக இருந்தனர். தற்போதும் திமுக உடனானா தொகுதி தேர்வில் தலைவர் என்ற முறையில் செல்வபெருந்தகை தான் முன்னிலை வகிக்கிறார். இப்படியான சூழலில் தான் கட்சிக்கு சிறு துறுமைபை கூட கிள்ளிப்போடாத சிலர் விற்று திண்கின்றனர் என்று காட்டமாக கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+