ஏ கிளியே.. ஜோதிமணி காதுல அப்படி என்ன ரகசியம் பேசறே.. கலகலக்கும் க்யூட் கிளிப்பேச்சு!
சென்னை: மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வந்த கரூர் எம்பி ஜோதிமணி தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் காக்டெய்ல் எனும் கிளியின் ரகப் பறவையுடன் கொஞ்சி மகிழும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கரூர் எம்பியாக உள்ளவர் ஜோதிமணி. இவர் எளிதில் அணுகக் கூடியவர். தேர்தல் நேரத்தில் கொளுத்தும் வெயிலை பார்க்காமல் நம்ம வீட்டு பெண்ணாக வீடு தோறும் பிரச்சாரம் செய்தவர்.
சட்டம் படித்துள்ள ஜோதிமணி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சோனியா ஆகியோரின் குட் வில் புக்கில் இடம்பெற்றுள்ளார்.

தேர்தல் பிரச்சாரம்
இதனால்தான் தமிழக சட்டசபை தேர்தலின்போது பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராகுல் காந்தி, கரூர் சென்ற போது அவரது பிரச்சார பயணம் முழுவதிலும் ஜோதிமணி இடம்பெற்றிருந்தார். அவருடன் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரியும் இருந்தார்.

கே எஸ் அழகிரி
ராகுல் ஆங்கிலத்தில் பேச அந்த பேச்சை கே எஸ் அழகிரியும் ஜோதிமணியும் தமிழில் மொழியாக்கம் செய்தனர். தொகுதி மக்களால் எளிதில் அணுகக் கூடியவர் ஜோதிமணி. இவர் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி
அது போல் தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியிலும் மக்கள் விரோத போக்கை கண்டித்தவர். அதே சமயம் நலத்திட்டங்கள் என்றால் ஓடிவந்து பாராட்டக் கூடியவர். இன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. இதற்கு 4 தினங்களுக்கு முன்னர் ஜோதிமணி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

ஓய்வில் ஜோதிமணி
அதில் அவர் பார்ப்பதற்கு ஓய்வில் இருப்பது தெரிகிறது. இதனால் தனது வீட்டில் வளர்க்கப்படும் காக்டெய்ல் எனும் கிளி வகையை சேர்ந்த பறவையுடன் கொஞ்சி மகிழ்கிறார். கைகளில் ஏறி விளையாடும் அந்த கிளி, திடீரென ஜோதிமணியின் தோளில் ஏறி உட்காருகிறது.

ஜோதிமணி ட்விட்டர்
இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்ட டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், Time to relax!
"துன்ப நினைவுகளும்
சோர்வும் பயமுமெல்லாம்
அன்பில் அழியுமடீ- கிளியே
அன்புக் கழிவில்லை காண் "பாரதி என தெரிவித்துள்ளார். இதை சொன்ன ஜோதிமணி, அந்த கிளி அவரது காதில் என்ன சொல்லியது என்பதை மட்டும் கூறவில்லையே!
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications