ஆமா.. எனக்கொரு சந்தேகம்.. நிஜமாகவே நிகிதா காருக்குள் தங்க நகை இருந்ததா? - பிரபலம் கேள்வி
சென்னை: திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதை ஒரு சாதாரண மரணம் என்று கடந்துவிட முடியவில்லை. முக்கியமாக, புகார் அளித்த இளம்பெண் நிகிதா மீது இப்போது சந்தேகக் கணைகள் திரும்பிவிட்டன. மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எழுப்பியுள்ள கேள்விகள், இந்த வழக்கின் அடுக்குகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

நகை எங்கே? ஆதாரமெங்கே?
நிகிதா ஏற்கெனவே பண மோசடி வழக்கில் சிக்கியவர் என்பதால், "அவரே நகையை எடுத்து வைத்துக்கொண்டு அஜித் குமார் மீது பொய்ப்புகார் கொடுத்திருக்கலாம்" என்று பத்திரிகையாளர் பிரகாஷ் பகிரங்கமாகவே சந்தேகம் கிளப்பியுள்ளார். அத்துடன், "காருக்குள் நகை இருந்தது என்பதற்கான ஆதாரம் எங்கே? அதை போலீஸ் ஏன் வெளிப்படையாகச் சொல்லவில்லை?" என்றும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது, அஜித் குமார் மீதான குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
முதல் தகவல் அறிக்கை எங்கே?
இந்த விவகாரத்தில் போலீசாரின் செயல்பாடு குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "ஒருவரை விசாரிக்கும் முன், ஏன் முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்யவில்லை?" என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது சட்ட விதிகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், விசாரணையின் வெளிப்படைத்தன்மை மீதும் சந்தேகத்தைத் தூண்டியுள்ளது.
திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு, இப்போது ஒரு சாதாரண வழக்காக இல்லாமல், பல கேள்விகளையும், மர்மங்களையும் உள்ளடக்கிய ஒரு புதிராக மாறியுள்ளது. இந்த முடிவற்ற சஸ்பென்ஸ் எங்கு போய் முடியும் என்பதை அறிய தமிழகமே காத்திருக்கிறது.
நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் 27 வயது இளைஞர் அஜித் குமார் என்பவர் காவலாளியாக உள்ளார். கடந்த 28ஆம் தேதி அந்தக் கோயிலுக்கு வயதான தாயுடன் நிகிதா என்பவர் வந்திருந்தார். அவருடைய தாய்க்கு, அஜித் குமார் வீல்சேர் கொண்டு வந்து கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தனது காரை அஜித் குமாரைவிட்டு ஓரமாக நிறுத்தச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, கோயிலுக்குள் சென்றுவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்ற நிகிதா, பாதி வழியில்தான் நகைகளைக் காணவில்லை எனத் தெரியவந்ததாகத் தெரிவித்தார்.
போலீஸில் அஜித் குமார்
இதையடுத்து, கோயில் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், அதன் பேரில் அஜித் குமாரைப் போலீஸில் ஒப்படைத்ததாகவும் அந்தப் பெண் கூறியிருந்தார். இந்த நிலையில், விசாரணைக்காக அஜித் குமாரைத் தனிப்படைப் போலீஸார் கடுமையாகத் தாக்கியதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு குறித்து நீதிபதி சுந்தர்லால் விசாரணை நடத்தி வருகிறார். காளியம்மன் கோயிலிலும், திருப்புவனம் காவல் நிலையத்திலும் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications