"வீட்டுல சும்மாதானே இருக்கீங்க.." அந்த ஏளன பேச்சு ஓவர்.. பெண்களுக்கு உரிமை தொகை.. குவிகிறது பாராட்டு
சென்னை: பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்ததில் இருந்தே சமூக வலைதளங்களில் அரசை பாராட்டி பதிவுகள் குவிந்து வருகின்றன.
நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம்.

முதலமைச்சர் உறுதி
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

கேஸ் விலை உயர்வு
ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும்
1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.

செப். 15 முதல்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

ரூ.7,000 கோடி ஒதுக்கீடு
இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுக மற்றும் பாஜகவினர் பல்வேறு விமர்சனங்களை கிளப்பி வருகிறார்கள். நிதி ஒதுக்கீடு போதாது என்றும், தகுதியான பெண்கள் என்றால் யார் என்றும் கேள்விகளை அடுக்கி வருகிறார்கள். அதே நேரம் ஊடகவியலாளர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்கள், சாமானிய மக்கள், அரசின் இந்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.
|
ஊடகவியலாளர் குணசேகரன்
அதேபோல் மூத்த பத்திரிகையாளர் குணசேகரன் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மகளிர் உரிமைத் தொகை வரும் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக ரூ.7,000 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ, ஒரு கோடி குடும்பத் தலைவிகள் பயனடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய நிதி இதுவாகும்." என்று பதிவிட்டு இருக்கிறார்.
|
ஊடகவியலாளர் நெல்சன் சேவியர்
இதுகுறித்து பிரபல ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "வீட்ல சும்மாதான் இருக்காங்க, வீட்டோட இருக்காங்க என குடும்ப தலைவிகளை இதுவரை அழைத்துவந்த சமூகம், கூட்டு உழைப்பின் ஒரு அங்கம் என அதை அங்கீகரித்து உரிமைத் தொகை' என பெயரிட்டு, தேவையும் தகுதியும் உள்ளவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மகிழ்வுடன் வரவேற்போம்." என்று பதிவிட்டு உள்ளார்.
|
எழுத்தாளர் டான் அசோக்
"வீக்கெண்ட் தெரியுமா?
ஐந்து நாள் ஆட்டம்
இரண்டு நாள் கூத்து;
வீக்கெண்டே இல்லாத
கூட்டம் ஒன்று உள்ளது;
ஹவுஸ் வைஃப் என்பார்கள்;
ஹோம் மேக்கர்கள் என்பார்கள்;
மகாலட்சுமிகள் என்றுகூட சொல்வதுண்டு;
வீக்கெண்ட்
அவர்களுக்கும் உண்டு;
காலை
கறிக்குழம்பும் இட்லியும்;
மதியம் சிக்கன்;
இரவில் சப்பாத்தியோ
தோசையோ;
ஞாயிறு விடுமுறை
என்பதையெல்லாம் அவர்கள்
கதையில் படித்திருக்கிறார்கள்;
சினிமாவில் பார்த்திருக்கிறார்கள்;
அவர்களுக்கோ
ஞாயிறு என்றால் ஓவர்டைம்;
ஆரியபவன் சாம்பாரில் இருந்து
அம்மா மெஸ் மீன் குழம்புவரை
அச்சு அசலாய் வைப்பார்கள்;
நீங்கள் கேடிவியில்
சுறா பார்த்துக்கொண்டிருக்கும்போது
அவர்கள் மீன் வறுத்துக்கொண்டிருப்பார்கள்;
நீங்கள் தீபாவளிக்கு
சாலமன் பாப்பையாவை ரசித்துக் கொண்டிருக்கும்போது
அவர்கள் கறி வறுவல்
கருகாமல் காத்துக்
கொண்டிருப்பார்கள்;
B.A, http://B.Sc, M.A, http://M.Sc, M.Phil
படித்திருந்தாலும்
கேட்டரிங்கும் ஹவுஸ் கீப்பிங்கும்தான்
அவர்கள் பணி;
"நீ வீட்ல சும்மாதானே இருக்க?"
என்பது அவர்கள் அடிக்கடி கேட்கும்
மகாபொய்களில் ஒன்று;
உலகில் அதிகமாய் உழைப்பவர்கள்
அவர்கள்தான்;
குறைந்தபட்ச ஊதியம்
பெறுபவர்களும் அவர்கள்தான்;
சேலைக்கும் செருப்புக்கும்
சோப்புக்கும் சிகப்பழகு
கிரீமுக்கும்
கணவனிடம் கையேந்தி நிற்கும்போது
உலகின் ஓய்வறியா
உன்னத உழைப்பாளிகள்,
ஒருநொடி பிச்சைக்காரர்கள் ஆகிறார்கள்;
கணவனுக்குப் புரிவதே இல்லை;
தான் உயிர்த்திருப்பதே அவர்களால்தான் என்று;
கணவன் இறந்தால்
மனைவி ஆயுள் கூடும்;
மனைவி இறந்தால்
கணவன் ஆயுள் குறையும்;
உயிர்கொடுத்து உழைப்பைக்
கொடுக்கும் பெண் இனத்திற்கு
ஊதியம் கொடுக்கிறது
தமிழ்நாடு அரசு;
வெறும் ஆயிரம்தான் எனினும்
அது இதுவரை
பெறாத ஊதியம் அல்லவா?
இதுவரை கிட்டா
சுய-மரியாதை அல்லவா?
இதுவே உலகில்
முதல் அல்லவா?
இத்தலைமுறையோடு
ஹோம்-மேக்கர்கள்
ஒழிந்துபோகட்டும்;
ஒருவர் உழைத்து
நால்வர் திங்கும்
நடைமுறை நாசமாய்
போகட்டும்;
அதுதான் நம்
கலாச்சாரம் என்றால்,
அது இத்தலைமுறையோடு
அடுப்பில் வெந்து கருகட்டும்
தீயில் கருகிச் சாகட்டும்!" என்று பதிவிட்டு இருக்கிறார்.
|
எழுத்தாளர் சிந்தன் பாராட்டு
இதுகுறித்து எழுத்தாளர் சிந்தன் வெளியிட்டு உள்ள பதிவில், "குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது. 7 மாதங்களுக்கு பின் அடுத்த நிதி நிலை அறிக்கை. எனவே மாதம் குறைந்தது ரூ.1000 கோடிகள் வழங்கப்படும் எனில், 'தகுதிவாய்ந்த' ஆகப் பெரும்பான்மையான தமிழ் நாட்டு குடும்பத் தலைவிகள் பலனடைவார்கள்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
பெண்ணுரிமை காவலர் ஸ்டாலின்
இதேபோல், பாபு வி.எம்.கே. என்ற நபர் ட்விட்டரில் "பெண்கள் படிக்க, புதுமைப் பெண் திட்டம் (மாதம் 1000 ரூபாய்) வேலைக்கு சென்று வர, கட்டணமில்லா பேருந்து திட்டம் (ஏறக்குறைய மாதம் 1000 ரூபாய்) வீட்டில் உழைக்கும் பெண்களுக்கும் உரிமைத் தொகை (1000 ரூபாய்) வழங்கி பெண்களின் உரிமையை காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் #பெண்ணுரிமைக்_காவலர்." என்று பதிவிட்டு இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications