"அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக.." மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிசில்டா பரபர பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிசில்டா அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக.. அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக." எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா அவர் மீது புகார் அளித்திருந்தார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அவர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

madhampatty rangaraj joy crizildda

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா

இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் இருந்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தான் அண்மையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையரகத்திலும் புகார் அளித்தார். மேலும், பல்வேறு யூடியூப் தளங்களில் பேட்டி அளித்து வருகிறார் ஜாய்.

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

இந்நிலையில் தனது கேட்டரிங் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவுக்கு எதிராக அவதூறு பரப்பு கருத்துக்களை பேச ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். ஜாய் கிரிசில்டாவின் குற்றச்சாட்டுக்கள் எந்த வித அடிப்படை ஆதராங்களும் இல்லாமல் முன்வைக்கப்பட்டவை எனவே அவர் மேற்கொண்டு அவதூறு பரப்பும் விதமாக பேசுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், ஜாய் கிரிஸில்டா செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

madhampatty rangaraj joy crizildda

ஜாய் கிரிசில்டா லேட்டஸ்ட் பதிவு

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவை "அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக.. அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக." என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். ஜாய் கிரிசில்டாவின் இந்தப் பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+