3 திமுக அமைச்சர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி-நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை முதல் மீண்டும் விசாரணை
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை நாளை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையை தொடங்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது உள்ளிட்ட வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போதைய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி (திமுக), வளர்மதி (அதிமுக) ஆகியோர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 3 மாதங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு வழக்கமான பணி மாறுதலுக்காக சுழற்சி முறையில் மாற்றப்பட்டார். இதனையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், எம்பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்தார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் நீதிபதி வெங்கடேஷ் நாளை முதல் விசாரிக்க உள்ளார். இதனால் ஆளும் திமுகவில் மட்டுமல்ல எதிர்க்கட்சியான அதிமுகவிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி: தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2 சொத்து குவிப்புகள் வழக்கு போடப்பட்டன. 2006-2011 ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பொன்முடி மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது. இந்த விடுதலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: 2006-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் நடந்த நிலையில் 2012-ல் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை மீண்டும் தாமாக முன்வந்து விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்குகள்: 2006- 2011-ல் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தனர் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர்கள் இருவர் மீதான வழக்கை தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு: 2006-2011-ல் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. அப்போது 2008-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக அமைச்சர் ஐ.பெரியசாமி ஒதுக்கினார் என்பது வழக்கு. 2012-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி வழக்கு: 2001-2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு வளர்மதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலை உத்தரவை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தாமாக முன்வைந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
நாளை முதல் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் முன்பாக இந்த வழக்குகள் விசாரணைக்கு வர இருப்பதால் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிலுமே பதற்றம் நிலவுகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications