சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழல் தடுப்பு சட்ட திருத்தத்தால் அரசு ஊழியருக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது- நீதிபதி மைக்கேல் குன்கா

Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் தடுப்பு சட்டம் 2018 (திருத்தம்)-ன் கீழ், அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது என்று நீதிபதி மைக்கேல் குன்கா தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன், இன்று, ஏற்பாடு செய்திருந்த "ஊழல் தடுப்பு சட்டம் 1998" "The Prevention Of Corruption Act 1998" தொடர்பாக ஆன்லைன் கருத்தரங்கில், நீதிபதி மைக்கேல் குன்கா பங்கேற்று உரையாற்றினார்.

Justice Micheal Cunha explains on Prevention Of Corruption Act 1998

மைக்கேன் குன்கா பேசியதாவது: ஊழல் தடுப்பு சட்டம் 1988ல் திருத்தம் செய்யப்பட்டபோது, பொதுத்துறை ஊழியர் யார் என்ற விளக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டது. யாரெல்லாம் பொதுமக்களோடு தொடர்புள்ள சேவையில் உள்ளார்களோ அனைவரும் இந்த சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டனர்.

ஆனால், 2018ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 17ஏ, 18 ஏ ஆகிய சட்டப் பிரிவுகள், மொத்த விசாரணையையும் திசை திருப்பும் வகையில் அமைந்தது.

லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அரசு அதிகாரிகள், அலுவலர்களை விசாரிக்க, முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து 17ஏ பிரிவில் சேர்க்கப்பட்டது.
எனவே, போலீஸ் அதிகாரி எந்த விசாரணையும் செய்ய முடியாது. அரசு ஊழியர் முறைகேடுக்கு பரிந்துரை செய்தாலோ, அல்லது முறைகேடு செய்ய முடிவு எடுத்தாலோ தவிர பிற குற்றங்களுக்கு விசாரிக்க முடியாது. அப்படியானால், பொது ஊழியர் லஞ்சம் வாங்கினால் எப்படி விசாரிக்க முடியும். அவர் என்ன முடிவு எடுத்தா லஞ்சம் வாங்குகிறார்.
இது தேவையற்ற திருத்தம்.

இந்த நிலையில்தான், சுப்பிரமணியம் சுவாமி vs சிபிஐ இயக்குநர் வழக்கை (2014) நினைவுகூற வேண்டியுள்ளது. டெல்லி போலீஸ் சட்டத்திற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், மத்திய அரசு முன் அனுமதி பெற்றுதான், இணை செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவியில் இருப்பவர்களை விசாரணை செய்ய வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்டில் சேலஞ்ச் செய்யப்பட்டது. விசாரணையின்போது, ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், சுதந்திர விசாரணை என்பது, ரொம்ப முக்கியம். ஒரு விசாரணையின் குறிக்கோள் என்பது உண்மையை கண்டறியது. எனவே, இந்த நோக்கத்திற்கு எதிரான எந்த சட்டமும் ஆர்டிகிள் 14ன்கீழ் செல்லத்தக்கது அல்ல என்று இதற்கு எதிரான எந்த சட்டமும் நிற்காது என்று தெரிவித்துள்ளது. வழக்கு இன்னும் நடந்து வருகிறது.

ஊழல் தடுப்பு சட்டம், குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து விவரமாக கூறியுள்ளது. சட்டப்பிரிவு 7, 10, 13 ஆகியவை, குற்றங்கள் குறித்து பேசுகின்றன. பிரிவு 8 மற்றும் 9 ஆகியவை, அரசு பணியாளர் அல்லாதவர்கள் ஊழலில் ஈடுபடுவது தொடர்பாக பேசுகின்றன.

தனி நபர், ஒருவர், அரசு ஊழியருக்காக ஊழல் செய்வது குற்றம். அரசு ஊழியரை இன்ப்ளூயன்ஸ் செய்ய, தனி நபர் லஞ்சம் வாங்கினால் குற்றம் என்கிறது செக்ஷன் 9. செக்ஷன் 11, பொது ஊழியர், வர்த்தக லாபத்தை ஒருவருக்கு செய்து கொடுத்தால் குற்றம் என வரையறுத்துள்ளது. அதாவது, முறைகேடாக, டெண்டர் ஒதுக்குவது போன்றவை இதன்கீழ் வரும்.

ஊழல் தடுப்பு சட்டம் 2018ல் திருத்தப் பட்டபோது, செக்ஷன் 7, 8, 9, 10, 12 ஆகியவை மாற்றியமைக்கப்பட்டன. செக்ஷன் 13 திருத்தம் செய்யப்பட்டது. பழைய ஷரத்துகளை புதிய ஷரத்துகளால் மாற்றியதால், அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. எனவே, ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகள் பலவற்றில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் எளிதாக விடுதலையாகிறார்கள்.

செக்ஷன் 8 படி, வலுக்கட்டாயப்படுத்தி லஞ்சம் கொடுத்தால் அதற்கு தண்டனை கொடுக்க முடியாது. ஆனால், 7 நாட்களுக்குள், இதுகுறித்து விசாரணை அதிகாரிக்கு அரசு ஊழியர் புகார் அளிக்க வேண்டும். அல்லது, லஞ்சம் வாங்கியதாகத்தான் கருதப்படுவார். இவ்வாறு மைக்கேல் குன்கா தெரிவித்தார்.

English summary
Justice Micheal Cunha given speech about The Prevention Of Corruption Act 1998 in a video discussion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X