தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை... அதிமுக பிரச்சார மேடையில் தெறிக்கவிட்ட K.P.முனுசாமி..!
சென்னை: தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் பாஜகவை மறைமுகமாக கடுமையாக சாடினார்.
மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் ஆட்சி என்றும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவிதார்.

அனல் பறக்கும் பேச்சு
சென்னையில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, பாஜகவை உண்டு இல்லை என செய்துவிட்டார். பாஜக என்ற வார்த்தையை தான் அவர் பயன்படுத்தவில்லையே தவிர மற்றபடி தேசியக் கட்சி என்ற பெயரில் தனது மனக்குமுறலை பொதுக்கூட்ட மேடையில் கொட்டித்தீர்த்தார்.

தேசியக்கட்சிகள்
தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி செய்து வருவதாகவும் இங்கு தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார். ஆனால் இப்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கருங்காலி கூட்டத்தினர் தமிழகத்திற்குள் நுழைய பார்ப்பதாக சீறினார். கே.பி.முனிசாமியின் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த சில நிர்வாகிகளே நெளிந்தனர்.

முனுசாமி திட்டவட்டம்
மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் ஆட்சி நடைபெறும் என்றும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்தார். இதேநிலை தான் கூட்டணி விவகாரத்திலும் என்று கூறினார். அது தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி, மாநில கட்சியாக இருந்தாலும் சரி என அவர் தெரிவித்தார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பதை நினைவுப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

சுளீர் பேச்சு
பாஜக மற்றும் பாமகவை மனதில் வைத்து கே.பி.முனுசாமி இதனைக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. கே.பி.முனுசாமியின் இந்த அனல் பறக்கும் பேச்சு அதிமுக கூட்டணி விவகாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications