இளம் வயதுதான்.. நடிகை மீனா கணவர் மரணம்.. பின்னணி என்ன.. கலா மாஸ்டர் சொன்ன உருக்கமான தகவல்!
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு ஏற்கெனவே பறவையின் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டதாகவும் இதனுடன் கொரோனாவும் பாதித்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ராவ் (46), இவருக்கு இரு நுரையீரல்களும் செயலிழந்து கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு புறாக்களின் எச்சத்தால் ஏற்பட்ட தொற்றும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது. எனினும் இது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருந்தது.
இன்னும் சிலர் அவர் பல மாதங்களாக மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்ததாகவும் பொய்யான தகவலை பரப்பி வந்தனர். இதையடுத்து மீனாவே தனது ட்விட்டரில் என் கணவர் இறப்பு குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

மீனா கணவர்
இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரது இறுதிச் சடங்குகள் வரை மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உருதுணையாக இருந்தவர் கலா மாஸ்டர். மீனா கணவரின் இறப்பு குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு கலா மாஸ்டர் பேட்டி அளித்தார்.

வித்யாசாகர்
அவர் கூறுகையில், வித்யாசாகர் கடந்த 29 ஆம்தேதி இரவு 7.30 மணிக்கு உயிரிழந்தார். ஆனால் அவரது நிலை குறித்து மீனா எனக்கு மாலை 5 மணிக்கே தெரிவித்துவிட்டார். இதையடுத்து நான் இரவு 7.30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று அங்கு எனது நட்புக்கு இலக்கணமாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தேன்.

மீனா குடும்பம்
எங்கள் குடும்பத்தினரும் மீனா குடும்பத்தினரும் ஒன்றாகத்தான் வெளியே செல்வோம். சாகரும் என்னை சேச்சி (அக்கா) என்றுதான் அழைப்பார். மீனாவை தங்க தட்டில் வைத்து தாங்கினார். 6 மாதங்களாக அவர் மருத்துவமனையில் இருந்ததாக நிறைய பேர் சொல்கிறார்கள். அது தவறு. அப்படியெல்லாம் இல்லை. பிப்ரவரி மாதம் மீனாவின் அம்மாவின் பிறந்தநாளை நாங்கள் கொண்டாடினோம். அப்போதும் சாகர் நன்றாக இருந்தார்.

என்ன நடந்தது
சாகருக்கு ஜனவரி மாதமே bird infect ஆகியிருந்தது. இது யாருக்குமே தெரியாது. மருத்துவர் சொல்லித்தான் எங்களுக்கு தெரியும். மீனா, சாகர், மீனாவின் அம்மா ஆகியோருக்கு கோவிட் வந்துவிட்டதால் ஜனவரி மாதம் நைனிகா பிறந்தநாளை கூட அவர்கள் கொண்டாடவில்லை. சாகருக்கு லேசான கொரோனா தொற்றுதான் இருந்தது.

பறவைகள் தொற்று
பறவைகளின் தொற்று பாதிப்பு ஏற்கெனவே அவருக்கு நுரையீரலை பாதித்துவிட்டிருக்கிறது. அது யாருக்குமே தெரியாமல் அதன் விளைவுகள் ஏற்படும்போதுதான் விஷயம் தெரிந்தது. இதையடுத்து சாகருக்கு ஆக்ஸிஜன் பிரச்சினை ஏற்பட்டது. இத்தனை மோசமாகும் என நினைக்கவில்லை. சாதாரணமாக சிகிச்சை எடுத்தார். இதையடுத்து மார்ச் மாதம் 23 அல்லது 24 ஆம் தேதி மருத்துவமனையில் சாகர் அனுமதிக்கப்பட்டார்.

பிறந்தநாள் வாழ்த்து
மார்ச் 26 ஆம் தேதி எனது பிறந்தநாளாக இருந்தாலும் நான் சாகரை மருத்துவமனையில் போய் பார்த்தேன். எனக்கு வாழ்த்துகளை சொன்னார். அப்போதும் நிறைய பேசினால் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது என செவிலியர் எச்சரித்தார். அதன்பின்னர்தான் அவரது நுரையீரல்கள் பாதிக்கப்பட்டுவிட்டதால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்வதாக மீனா தெரிவித்தார்.

நுரையீரல் பாதிப்பு
ஏற்கெனவே பறவைகளால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதனுடன் கொரோனா வந்ததால் பாதிப்பு மேலும் அதிகரித்தது. மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் தானத்திற்கு காத்திருந்தோம். நிறைய கிடைத்தது. ஆனால் அது சாகருக்கு பொருந்தவில்லை. ஜூன் மாதம் 9ஆம் தேதி கூட அவருக்கு நுரையீரல் கிடைத்தது. ஆனால் அதுவும் பொருந்தவில்லை என மீனா கண்ணீருடன் தெரிவித்தார்.

மன உளைச்சல்
இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் சாகர் மன உளைச்சலில் உள்ளார் என மீனா எனக்கு போன் செய்து சொன்னார். அப்போது மருத்துவர்கள் சொன்னது, அவரது மற்ற உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக தெரிவித்தனர். 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அவருக்கு பல்ஸ் குறைந்து கொண்டே சென்றதாக மீனாவின் தாய் எனக்கு போன் செய்து அழுதார். உடனே இன்னொரு போனில் இருந்து மீனா போன் செய்து இறந்துவிட்டதாக அழுதார். பின்னர்தான் நான் அவரது வீட்டிற்கு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்தேன் என கலா மாஸ்டர் தெரிவித்தார். ஆக கலா மாஸ்டர் சொல்வதை பார்த்தால் அவருக்கு ஏற்கெனவே பறவைகளால் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கிறது. கூடவே கோவிட்டும் ஜனவரி மாதம் வந்துவிட்டதால் பெரிய பாதிப்பாகி நுரையீரலே செயலிழந்துவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications