Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rs 5000: தமிழக வரலாற்றில் முதல் முறையாக! ஒரே நாளில் ரூ.6550 கோடி செலவு! உதயசந்திரனின் சாமர்த்தியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிருக்கு ரூ.6550 கோடி நிதியை திரட்டி ஒரே நாளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தது தமிழக வரலாற்றில் முதல் முறையாகும்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 15 ஆம் தேதி இந்த நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை திடீரென பயனாளிகளின் கணக்கிற்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ 5000 வரவு வைக்கப்பட்டது.

mk stalin rs 1000 aid 1000

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு தலா ரூ 1000, மே மாதம் சிறப்பு நிதியாக ரூ 2000 என மொத்தம் ரூ 5000 வழங்கப்பட்டது தெரியவந்தது.

எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென 5000 ரூபாய் ஏன் வரவு வைக்கப்பட்டது என்பதை விசாரித்த போதுதான் பல்வேறு தகவல்கள் வெளியே வந்தன. தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை முடக்க பார்க்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பீகார் சட்டசபை தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்தாலும் பெண்கள் தொழில் தொடங்க ஒரு திட்டம் ரூ 10000 என்பதை தேர்தலுக்கு முந்தைய நாள் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்தார்கள். அப்போது தேர்தல் ஆணையம் தலையிட்டு தடை விதிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கையும் பதிவு செய்யவில்லை.

மகாராஷ்டிராவிலும் பெண்களுக்கான ஒரு திட்டத்திற்கான நிதியை தேர்தலின் போது கொடுத்தார்கள். ஆனால் அஸ்ஸாம் மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ரூ 8 ஆயிரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதை கண்டித்து அஸ்ஸாம் அரசுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய என்பவர் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் "அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், வாக்குறுதிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்" என அவர் தனது வழக்கில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இதனிடையே மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடந்த போது மகளிர் உதவித் தொகைக்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் பாஜக அரசு நடந்து கொண்டிருந்த போதிலும் தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட தடை உத்தரவை போட்டது.

எனவே இந்த வழக்கை சுட்டிக் காட்டி தமிழகத்திலும் தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு தடை கோரி வழக்கு தொடர பாஜக திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில்தான் பீகார் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு ரூ 10000 வரவு வைக்கப்பட்டதை எதிர்த்து பிரசாந்த் கிஷோர், "வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து நிதிஷ் குமார் தேர்தலில் வென்றார். இந்த தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று வழக்கு தொடர்ந்தார்.

அப்போது அவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், தோற்றுவிட்டு தேர்தலை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

எனினும் அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். இலவசங்கள் அறிவிப்பு மிகவும் முக்கியமானது பொது நலன் சார்ந்தது என்பதால் மார்ச் மாதத்தில் 3 நீதிபதிகள் விசாரிப்பர் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாஜகவின் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் அறிந்துக் கொண்டு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் ஏதாவது தடை உத்தரவை பிறப்பித்துவிட்டால் அது திமுக அரசுக்கு பின்னடைவாக மாறிவிடும் என்பதை ஸ்டாலின் கருத்தில் கொண்டார்.

இதையடுத்து எந்த அறிவிப்பையும் கொடுக்காமல் திடீரென இன்று காலை 6.30 மணி முதல் மகளிர் உரிமை தொகையாக ரூ 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. சுமார் 1.31 கோடி பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் ரூ 6550 கோடி நிதியை திரட்டி வைத்திருந்தது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

நேரடியாக பணம் செலுத்தப்படுவதால் இந்த 5 ஆயிரத்தை தவணைகளாகவும் வழங்க முடியாது. எனவே ஒரே நாளில் அனைவருக்கும் இந்த பெரிய தொகையை வரவு வைக்க நிதித் துறைக்கு உத்தரவிட்டு இந்த நிதியை எடுத்து வைத்திருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் முந்திக் கொண்டு கொடுத்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

தமிழகத்தில் எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் சுதந்திர இந்தியாவில் ஒரே நாளில் மக்கள் நலத் திட்டத்திற்காக இவ்வளவு பெரிய தொகை ரூ 6560 கோடி செலவிடப்படுவது இதுவே முதல் முறை. தமிழக நிதித் துறை வரலாற்றிலும் இது முதல்முறை. இதற்கு காரணம் நிதித் துறை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள்தான் காரணம் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+