சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரலாக தமிழக விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களின் முதன்மையான அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) இயக்குநர் ஜெனரலாக தமிழ்நாட்டின் மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.எஸ்.ஐ.ஆர். இயக்குநர் ஜெனரலாக பெண் விஞ்ஞானி ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனமானது நாட்டின் பல பகுதிகளில் 38 ஆய்வகங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் மொத்தம் 4,600 விஞ்ஞானிகள், 8,000 தொழில்நுட்ப வல்லுநர்கல் என 14,000க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.

 Kalaiselvi from TN becomes the first woman director general in CSIR

சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றிய சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து சி.எஸ்.ஐ.ஆர் புதிய இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் கலைச்செல்வி. மத்திய அரசின் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி துறையின் செயலாளராகவும் கலைச்செல்வி பதவி வகிப்பார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் விஞ்ஞானி கலைச்செல்வி. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தமிழ்வழியில் படித்தவர். தற்போது, காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர்-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.

ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி தமது சமூக வலைதளப் பக்கத்தில் சி.எஸ்.ஐ.ஆர். இயக்குநர் ஜெனரல் கலைச்செல்விக்கு வாழ்த்து தெரிவித்து எழுதியுள்ளதாவது: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) அதன் 80 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் இயக்குநர் ஜெனரலாக முனைவர் என்,.கலைச்செல்வி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐஆர்-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக, 38 ஆய்வகங்கள் மற்றும் கிட்டத்தட்ட 4,500 விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தியவர்.
திருமதி கலைசெல்வியின் ஆராய்ச்சிப் பணி 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து, மின்வேதியியல் சக்தி அமைப்புகள் மற்றும் மின்முனைப் பொருட்களை உருவாக்குதல், தனிப்பயன்-வடிவமைப்பு முறைகள், எதிர்வினை அளவுருக்களை மேம்படுத்துதல் மற்றும் ஆற்றல் சேமிப்பு சாதனங்களை தயாரிப்பதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்தகடுகளின் மின்வேதியியல் மதிப்பீடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் லித்தியம் மற்றும் அதற்கு அப்பால் லித்தியம் மின்கலன்கள் மட்டுமன்றி, கழிவுகளிலிருந்து ஆற்றல் பெரும் வகையிலான மின்முனைகள் மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்ற பல ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட ஆளுமை.
அறிவியல் தமிழிலும் வல்லவர். குன்றக்குடி அடிகளாரின் 'சுதேசி விஞ்ஞான இயக்கம் ' நடத்திவரும் 'அறிக அறிவியல் இதழில்' என் கல்லூரித்தோழர் முனைவர் மீ.நோயல் ஆசிரியராக இருந்தபோது அதில் பல அறிவியல் கட்டுரைகள் எழுதியவர். அவருக்குப்பின்னர் முனைவர் கலைச்செல்வி அதன் ஆசிரியராகத் திறம்படச் செயல்பட்டார் என்பது பலருக்கும் தெரியாது என எழுதியுள்ளார்.

 Kalaiselvi from TN becomes the first woman director general in CSIR

அண்ணாமலை வாழ்த்து

சி.எஸ்.ஐ.ஆர். இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் வாழ்த்து செய்தி: நுழைவு நிலை விஞ்ஞானியாகத் துவங்கி இன்று 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பான CSIRன் முதல் பெண் இயக்குநராக உயர்ந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சிங்கப் பெண்மணி நல்லதம்பி கலைச்செல்வி அவர்களுக்கு @BJP4TamilNadu சார்பாக வாழ்த்துக்கள். நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் எட்டாண்டு ஆட்சியில் தான் ராணுவம் முதல் அரசுத் துறைகளில் உள்ள உயர் பதவிகளில் சாதனை பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

English summary
Dr N Kalaiselvi has been appointed as the DG, CSIR & Secretary, DSIR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X