Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலாஷேத்ரா பெயரை கூட சொல்ல முடியாதவர்கள் என்றால் என்ன அர்த்தம் அபிராமி? ஒரே பேட்டியால் பெரிய சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரத்தில் நடிகை அபிராமி பேசிய வன்மமான கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆசிரியர்கள் அங்கே இருக்கும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. திருவான்மியூரில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இது 1936ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது.

இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இங்கு பேராசிரியர் ஒருவர் உட்பட 4 பேர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவிகள் அந்நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக புகார் கொடுத்த மாணவிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தற்போது ஆசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அபிராமி பேச்சு

அபிராமி பேச்சு

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களை கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் காப்பாற்றுவதாகவும். நடன துறையின் தலைவர் ஜோஸ்லின் மேனன் தவறு செய்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. அங்கே மாணவிகள் இரவு முழுக்க போராட்டம் நடத்திய நிலையியல் அதிகாலையில் பலர் மயங்கி விழுந்தனர். இந்த விவகாரம் பற்றி பிக்பாஸ் பிரபலம் நடிகை அபிராமி பேசி இருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதில், என்ன பிரச்சனையோ.. என்ன புகாரோ.. அந்த விவகாரம் நடந்த போதே சொல்ல வேண்டும். பொதுவாக பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் நான் முதல் ஆளாக குரல் கொடுத்து இருக்கிறேன். கலாஷேத்ராவில்தான் நானும் படித்தேன். இதில் ஒரு சிலர் பேசுகிறார்கள். ஒரு பக்கத்துக்கு ஸ்டோரியை மட்டும் நாம் பார்க்கவே கூடாது. இன்னொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். நிறைய பேர் ஒரு பக்க ஸ்டோரியை மட்டும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனை வருடமாக.. கிட்டத்தட்ட 89 வருடமாக அங்கு குற்றம் எதுவும் நடக்கவே இல்லை.

கலாஷேத்ரா

கலாஷேத்ரா

ஆனால் இப்போது கலாஷேத்ராவில் இப்படித்தான் இத்தனை காலமாக நடந்ததாக சிலர் சொல்கிறார்கள். கலாஷேத்ராவில் படிக்காதவர்கள்.. கலாஷேத்ராவை பற்றி தெரியாதவர்கள் கூட இப்படி பேசுகிறார்கள். கலாஷேத்ராவில் பெயரை கூட சரியாக சொல்ல முடியாதவர்கள் அதை பற்றி தவறாக பேசுகிறார்கள். அது என் மனதிற்கு வலியை கொடுக்கிறது. இதில் நீதியை பெற்று தருவதை விட கலாஷேத்ரா மீது புகார் வைக்கவே இவர்கள் பார்க்கிறார்கள். கலாஷேத்ராவின் பெயரை கெடுக்கவே இவர்கள் பார்க்கிறார்கள்.

 ரேவதி

ரேவதி

அதோடு அதன் இயக்குனர் ரேவதி மேம்.. இப்போதுதான் அந்த பதவிக்கு வந்தார். 10 வருடமாக அங்கே குற்றங்கள் நடப்பதாக கூறினார்கள். அப்படி இருக்கும் போது ரேவதி மேம் மீது புகார் வைக்க கூடாது. இங்கே ஒரு பக்கத்தின் கதையை மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நிறைய கேள்விகள் இருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட டீச்சருக்கு பேச வாய்ப்பே கொடுக்கவில்லை. அவர்களின் குடும்பத்தை பற்றி யாருமே யோசிக்கவில்லை. இந்த விஷயத்தில் கலாஷேத்ராவிற்கு எதிராக பேசுவது மிக மிக தவறான விஷயம், என்று நடிகை அபிராமி பேசி இருக்கிறார்.

உச்சரிக்க முடியாதவங்க?

உச்சரிக்க முடியாதவங்க?

அவரின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. பொதுவாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு புகார்களில் கண்ணை மூடிக்கொண்டு பெண்கள் அருகில்தான் நிற்க வேண்டும். அவர்களுக்கே சப்போர்ட் செய்ய வேண்டும். ஆண்கள் செய்கிறார்களோ இல்லையோ குறைந்தது பெண்களாவது பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் அபிராமியோ பெண்ணாக இருந்து கொண்டு அங்கே வேலை பார்க்கும் ஆண் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பேசியது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக காட்டமான கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

 கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அதிலும் நேர் கொண்ட பார்வை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி பேசும் படத்தில் நடித்துவிட்டு.. இப்படி ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக அபிராமி பேசி இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. திடீரென இந்த விவகாரத்தில் "ஆண்கள்" பக்கம் நிற்க என்ன காரணம்? குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு குடும்பம் இருக்குமே என்று அவரின் குடும்பத்தை பற்றி கவலைப்பட்டு இருக்கிறார் அபிராமி.. அப்படி என்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குடும்பம் இல்லையா? அவர்கள் குடும்பம் எல்லாம் இவர் குரல் கொடுக்க தகுதியற்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெயரை சொல்ல முடியாது

பெயரை சொல்ல முடியாது

இதெல்லாம் போக.. கலாஷேத்ரா என்ற பெயரை சொல்ல முடியாதவர்கள் எல்லாம் கலாஷேத்ரா மீது புகார் வைக்கிறார்கள் என்று கேட்டு உள்ளார்.. சீரியஸாக.. இந்த உச்சரிப்புதான் உங்கள் பிரச்சனையா அபிராமி? கலாஷேத்ரா என்று சொல்ல முடியாதவர்கள் பெண்களுக்காக குரல் கொடுக்க கூடாதா? அல்லது கலாஷேத்ரா என்று சொல்ல முடியாதவர்கள் என்று நீங்கள் யாரை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்?.. அவர்கள் என்றால் யார்? உங்களுக்கு அங்கே பாலியல் தொல்லை நடக்கவில்லை என்றால் மற்ற பெண்கள் எல்லாம் பேசவே கூடாதா? அந்த ஆசியர் மீது புகார் அளித்து நடடிக்கை எடுக்காத ரேவதிக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பது ஏன்? அபிராமியின் இந்த பேட்டியை தொடர்ந்து அவர் மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அங்கே பாலியல் புகார்கள் தாண்டி ஜாதி ரீதியான கடும் பாகுபாடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில்தான் கலாஷேத்ராவிற்கு ஆதரவாக அபிராமி போன்ற கலாஷேத்ராவை சரியாக உச்சரிக்கும் "நபர்கள்" பேசி இருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+