4 பேராசிரியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை.. செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற கலாஷேத்ரா மாணவிகள்
சென்னை: பாலியல் புகாருக்குள்ளான 4 உதவி பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்ததை அடுத்து இன்று செமஸ்டர் தேர்வுகளை எழுத கல்லூரிக்கு கலாஷேத்ரா மாணவிகள் வருகை தந்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ளது கலாஷேத்ரா பவுண்டேஷன். இங்கு பரத கலையையும் இசையையும் வளர்க்கும் விதமாக 1936 ஆம் ஆண்டு ருக்மிணி தேவி அருண்டேலினால் தொடங்கப்பட்ட ஒரு கல்லூரியாகும்.
இங்கு உலகெங்கும் மாணவிகள் வந்து தங்கி பயில்கிறார்கள். இது பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பரதம் பயின்று வருகிறார்கள்.

உதவி பேராசிரியர்கள்
இந்த நிலையில் உதவி பேரசிரியர்களாக ஹரி பத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேரும் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் கூறிய போதிலும் அவர்கள் யாரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கல்லூரிக்கு செல்லாமல் போராட்டம்
இதை கண்டித்து மாணவிகள் கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கல்லூரிக்கு ஏப்ரல் 6 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவிகளிடம் மத்திய, மாநில பெண்கள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை நேற்று முன் தினம் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் சமர்ப்பித்தார்.

போராட்டம்
போராட்டத்தை கைவிட்டுவிட்டு கல்லூரிக்குத் திரும்பும்படி நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தையில் பாலியல் தொல்லை கொடுத்த 4 உதவி பேராசிரியர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை கல்லூரிக்கு திரும்ப மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனிடையே மாணவிகளுக்கு ஏப்ரல் 5 முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

4 பேர் டிஸ்மிஸ்
ஆனால் மாணவிகளோ பாலியல் புகாருக்குள்ளான 4 பேர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் கல்லூரிக்குள் போக முடியாது என தெரிவித்தனர். இதனால் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் சென்னை மாதவரத்தில் தோழி வீட்டில் பதுங்கியிருந்த பாலியல் புகாருக்குள்ளானவர்களில் ஒருவரான உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீஸார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை
இதையடுத்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அந்த 4 பேர் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வாய்மொழி அறிவிப்பை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர். இதையடுத்து பாலியல் புகாருக்குள்ளான 4 உதவி பேராசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக நேற்றைய தினம் அறிவிப்பை வெளியிட்டது.

கல்லூரிக்கு திரும்பும் மாணவிகள்
இதையடுத்து மாணவிகள் இன்று முதல் கலாஷேத்ரா கல்லூரிக்கு சென்றுள்ளனர். செமஸ்டர் தேர்வுகளை எழுதுகிறார்கள். கடந்த மார்ச் மாதமே செமஸ்டர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் போராட்டம் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. நாளை நடனம் மற்றும் இசைத் துறை மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
-
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications