அதிமுகவில் காளியம்மாளுக்கு சீட் இல்லையாம்.. அந்த தொகுதியில் பாமக கோரிக்கை.. வாக்கு கொடுத்த எடப்பாடி!
சென்னை: அதிமுகவில் இணைந்துள்ள காளியம்மாளுக்கு சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் நாகை தொகுதியில் தங்க. கதிரவன் அதிமுகவுக்காக போட்டியிட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் மயிலாடுதுறை தொகுதியை பாமக எதிர்பார்த்திருக்கிறது. இதனால் தொகுதி கொடுக்க முயற்சிப்பதாக மட்டுமே எடப்பாடி பழனிசாமி உறுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது.
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஓராண்டாக அமைதியாக இருந்தார். தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த காளியம்மாள், தவெகவில் இணைவதாக இருந்தது. ஆனால் தவெகவினர் பெரிதாக ஆர்வம் காட்டாத சூழலில், திடீரென அதிமுகவில் இணைந்திருக்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் காளியம்மாளை அழைத்து வந்துள்ளனர். அதிமுகவில் இணைவதற்கு முன்பாக காளியம்மாள் நாகை தொகுதியை டிமாண்ட்டாக வைத்திருக்கிறார். ஆனால் நாகை தொகுதியில் போட்டியிட கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக நிர்வாகி தங்க. கதிரவன் பணியாற்றி வந்திருக்கிறார்.
அதேபோல் கடந்த சட்டசபைத் தேர்தலில் நாகை தொகுதியில் தங்க. கதிரவன் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வேட்பாளர் ஷா நவாஸிடம் தோல்வி அடைந்தார். இம்முறை அதனை ஈடுபட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் காளியம்மாள் நாகை இல்லையென்றால் மயிலாடுதுறை தொகுதியை கேட்டிருக்கிறார்.
ஆனால் மயிலாடுதுறை தொகுதியை பாமக எதிர்பார்த்திருக்கிறது. கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளரிடம் பாமக வேட்பாளர் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார். இதனால் மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்படுமா என்பதும் கேள்வி தான். ஆனால் காளியம்மாள் நேரில் சந்தித்த போது, சீட் ஒதுக்க நிச்சயமாக முயற்சிப்போம்.
ஆனால் சட்டசபைத் தேர்தலில் சீட் ஒதுக்க முடியவில்லை என்றால், சோர்ந்துவிட வேண்டும். ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக வாரியப் பதவி ஒதுக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவில் காளியம்மாளுக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட உள்ளதும் தெரிய வந்துள்ளது.
-
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications