‛‛நீதிமன்றம் சென்ற அண்ணாமலை’’.. ரூ.1 கோடி கேட்டு ஆர்எஸ் பாரதி மீது மானநஷ்ட வழக்கு.. என்ன காரணம்?
சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு சென்று ரூ.1 கோடி கேட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை 66 பேர் வரை பலியாகி உள்ளனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதுதொடர்பாக 15க்கும் அதிகமானவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய பலிக்கு காரணம் எனக்கூறி முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதோடு அவர்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு திமுக தலைவர்களும் பதிலடி கொடுத்தனர்.
‛நகைச்சுவையை திரிக்காதீங்க’’.. நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என கூறியது ஏன்? ஆர்எஸ் பாரதி விளக்கம்
இந்நிலையில் தான் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, ‛‛கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விஷயத்தில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலையின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு எழுந்திருக்கிறது’’ என தெரிவித்தார்.
இப்போ நாய் கூட பிஏ பட்டம் வாங்குது..டாக்டர் பட்டம் திராவிட இயக்கம் போட்ட பிச்சை! ஆர்.எஸ்.பாரதி பகீர்
இதையடுத்து தன்னை பற்றி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி அண்ணாமலை சார்பில் ஆர்எஸ் பாரதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் ‛‛அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
‛மன்னிப்பு கேட்க முடியாது’.. அண்ணாமலையிடம் ரூ.2 கோடி கேட்டு ஆர்எஸ் பாரதி நோட்டீஸ்! முற்றும் மோதல்
அதன்பிறகு ஆர்எஸ் பாரதி, அண்ணாமலைக்கு பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ‛‛மன்னிப்பு கோர முடியாது. இழப்பீடும் தர முடியாது. வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மாறாக திமுக பற்றிய உங்களின் கருத்துக்கு மன்னிப்பு மற்றும் இழப்பீடாக ரூ.2 கோடி தர வேண்டும். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திமுகவை தொடர்புப்படுத்தியதற்கான நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அதுமட்டுமின்றி ரூ.2 கோடியை இழப்பீடாக முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும்’’ என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் தற்போது ஆர்எஸ் பாரதிக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரூ.1 கோடி கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று மானநஷ்ட அவதூறு வழக்கை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications