நீதி கிடைக்கனும்! ஸ்டாலினை தொடர்ந்து அண்ணாமலையை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர்!பின்னணி
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி மர்மமரணம் அடைந்தார். இந்நிலையில் மாணவியின் தாய் செல்வி முதல் அமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை திடீரென்று சந்தித்து மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக நடந்த போராட்டம் கலவரமானது. போராட்டக்கார்கள் பள்ளியை சூறையாடி வாகனங்களை சேதப்படுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் கோரியதை தொடர்ந்து மாணவியின் உடல் 2 முறை உடற்கூராய்வு செய்யப்பட்டது.

பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்
மேலும் மாணவியின் இறப்பு குறித்து சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை, ஆதாரங்கள் அடிப்படையில் மாணவி கொலை செய்யப்படவில்லை. பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

அண்ணாமலையுடன் சந்திப்பு
இந்நிலையில் தான் இன்று திடீரென்று மாணவியின் தாய் செல்வி தனது கணவருடன் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். அப்போது மனு ஒன்றை அவர் வழங்கினார். மாணவி இறப்பில் நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் மாணவியின் மரணத்தில் உள்ள மர்மங்களை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதற்கு அண்ணாமலையும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.

முன்பு முதல்வருடன் சந்திப்பு
இதன் தொடர்ச்சியாக மாணவியின் பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும். மாணவியின் மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் சுணக்கம் உள்ளது. இந்த விசாரணையை விரைந்து முடிக்கவும் கோரிக்கை வைத்தார். இதனை கேட்ட முதல்வர் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.

ஸ்டாலின் உறுதி
இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‛‛சமீபத்தில் ஜாமீன் பெற்றுள்ள பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீனை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழியாக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை கேட்டுக்கொண்ட முதலமைச்சர், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் குற்றவாளிகளை நாங்கள் தப்பிக்க விடமாட்டோம் எனவும் உறுதியளித்திருக்கிறார்" என்று மாணவியின் தாய் செல்வி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications