சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கள்ளக்குறிச்சி வன்முறை: நக்சல் கும்பலால் முதல்வர் ஸ்டாலின் பதவிக்கு உலை.. அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: ‛‛கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் உள்ள நக்சல் கும்பல்களை கண்டுபிடித்து வேருடன் அழிக்கவில்லை என்றால் முதல்வர் பதவிக்கே உலை வைத்துவிடும்'' என இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அருகே கனியாமூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

 மாணவி உயிரிழந்த சம்பவம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மாணவி உயிரிழந்த சம்பவம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

பள்ளியில் வன்முறை

பள்ளியில் வன்முறை

இந்த விவகாரத்தில் பள்ளியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும் பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைத்தனர். மேலும் வகுப்பறைகளையும் சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவியின் மர்மமரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் இறப்புக்காண காரணத்தை அறியும் வகையில் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் மறுபிரதே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

இந்நிலையில் கலவரத்தின் பின்னணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், பிஎப்ஐ, மக்கள் அதிகாரம் போன்ற சில அமைப்புகள் உள்ளதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டை சீர்குலைக்கும் செயல்

நாட்டை சீர்குலைக்கும் செயல்

கடந்த வாரம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளியில் நடந்த மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தமிழகத்தை உலுக்கியது. பள்ளி கலவரக்காரர்களால் அடித்து உடைக்கப்பட்டதும், பொருட்கள் சூரையாடப்பட்டதும், பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீவைத்து எரிக்கப்பட்டதும், அங்குள்ள பசுமாடுகளின் பால்தரும் காம்புகள் சேதப்படுத்தப்பட்டதும் முற்றிலும் தவறான, நாட்டை சீர்குலைக்கக்கூடிய செயல்.

அந்நிய கைக்கூலி சக்திகள்

அந்நிய கைக்கூலி சக்திகள்

மாணவியை பறிகொடுத்த பெற்றோர், கோபத்தில் இதனை செய்தது போல் தெரியவில்லை. மாறாக கலவரம் நடந்த நேரத்தில் மாணவியின் பெற்றோர் அங்கு இல்லை என்ற தகவலை பெற்றோர் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் கூறியுள்ளதை நாம் இங்கு எடுத்து கொள்ள வேண்டும். இந்த சம்பவம் சரியான திட்டமிடப்பட்டு கலவரத்தை செய்யக்கூடிய ஆட்கள் அங்கே முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, சரியான நேரம் பார்த்து தாக்குதல் நடந்தேறியுள்ளது. இதன் பின்னணியில் நாட்டு மக்களுக்கு பிரிவினைவாதத்தை மனதில் ஏற்படுத்தி அதன்மூலம் துண்டாட நினைக்கும் சில அந்நிய கைக்கூலி சக்திகளின் வேலை உள்ளது.

என்ஐஏ விசாரணை

என்ஐஏ விசாரணை

இகுறிப்பாக இதன் பின்னணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், பிஎப்ஐ, மக்கள் அதிகாரம் போன்ற சில அமைப்புகள் உள்ளன. இவர்களின் வேலைதான் இது. ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட், பாக்ஸ்கான் ஆலை போன்ற இடங்களில் இதேபோலவே கலவரம் திட்டமிடப்பட்டு தூண்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சதிகாரர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக இதன் பின்னணியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) முழுவதும் விசாரிக்க வேண்டும். இல்லையேல் நாட்டுக்கும், மக்களின் அமைதிக்கும் பெரிய ஆபத்து.

முதல்வர் பதவிக்கு உலை

முதல்வர் பதவிக்கு உலை

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த அமைப்புகளின் போராட்டங்கள் அரசியல் ரீதியாக அவருக்கு உதவியாக இருந்திருக்கும். இதனை வைத்து அரசியல் செய்திருக்கலாம். ஆனால் இவர்கள் நாட்டின் புற்றுநோய்கள். இந்த இயக்கங்கள் இருபுறமும் கூரான கத்தி. இதனை பயன்படுத்துபவர்களின் எதிரியையும் காயப்படுத்தும், பயன்படுத்துபவரையும் காயப்படுத்திவிடும். இந்த நிலை தான் இப்போது உங்களுக்கு. இந்த நக்சல் கும்பல்களை நீங்கள் வேருடன் கண்டுபிடித்து அழிக்கவில்லை என்றால் நாளை உங்கள் முதல்வர் பதவிக்கே உலை வைத்துவிடும்'' என குறிப்பிட்டுள்ளார்.

English summary
There are some organizations behind the Kallakurichi riots. If the naxal gangs involved in this riot are not found and eradicated, then the chief minister will be in trouble," said Arjun Sampath, founder of the Hindu People's Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X