கொரோனா காலத்தில் இலவச இரவு நேரபாடசாலை.. திருத்துறைப்பூண்டி இளைஞர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்தில் இலவச இரவு நேர பாடசாலை நடத்தி 72 மாணவர்களுக்கு கல்வி கற்பித்த திருத்துறைப்பூண்டி இளைஞர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி அய்யூர் இளைஞர்கள் அபினேஷ், கவியரசன் இருவரது முன்முயற்சியால் கொரோனா லாக்டவுன் காலத்தில் இரவு நேர பாடசாலை உருவாக்கப்பட்டது. இந்த பாடசாலையில் 72 மாணவர்கள் இணைந்தனர்.
எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்து வரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது. ஊரடங்குக் காலத்தில் பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். (1/2) pic.twitter.com/wzwyFblNwx
— Kamal Haasan (@ikamalhaasan) January 3, 2021
இந்த 72 பேருக்கும் இலவசமாக கல்வி கற்கப்பட்டது. உள்ளூர் இளைஞர்கள், ஆசிரியைகள் உதவியுடன் இந்த முயற்சியை வெற்றிகரமாக்கினர். இளைஞர்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்து வரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது. ஊரடங்குக் காலத்தில் பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். வந்தனம். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications