யார் என்ன சொன்னா என்ன? ஸ்டாலினின் செயலால் பூரித்து போன கமல்ஹாசன்.. ஆஹா சொன்னதை கவனிச்சீங்களா?
சென்னை: தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
கடந்த வாரம் தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர தொழிற்சாலை வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி நேரம் என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஐடி நிறுவனங்களுக்கு 12 மணி நேர வேலை அனுமதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிலும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் தனியார் தொழிற்சாலை வேலை நேர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.
ஐடி நிறுவனங்கள் சில வைத்த கோரிக்கை காரணமாவும், உற்பத்தியை பெருக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதற்கு முன் 8 மணி நேரத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்ற விதி நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சட்டப்படி 12 மணி நேரம் என்பது கட்டாயம் கிடையாது. அதாவது 12 மணி நேரம் வேண்டாம் என்றால் ஊழியர்கள் தங்கள் நிறுவங்களிடம் மறுக்க முடியும், என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் எதிர்ப்பு:
இதை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன. நேற்று இது தொடர்பாக அரசுக்கும், தொழிற்சங்கங்களுக்கு இடையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கூட இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
கமல்ஹாசன்:
இது தொடர்பாக கமல்ஹாசன் செய்துள்ள போஸ்டில், தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். திரு மு க ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன்.
12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டு உள்ளார்.
அறிக்கை:
இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் கடந்த 21-4-2023 அன்று "2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண் 8/2023)"". தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும் சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தலைமைச் செயலகத்தில் இன்று (24-4-2023) மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர். மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச் சட்டமுன்வடிவு சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)"- என்ற சட்டமுன்வடிவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல் தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும், இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி தமிழ்நாட்டில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும். எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்
மேலும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு. தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண்டுள்ளது என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எடுத்துக்கூறினார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவை தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும் நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது. தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறதோ அப்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது தற்போது அதே சிந்தனையைத் தாங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதுமே தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக என்றென்றும் விளங்கும் என்பதற்கு கீழ்க்காணும் திட்டங்களே சான்றாகும்.
1969-ல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, "தொழில், தொழிலாளர் நலம், கூட்டுறவு" என ஒன்றாக இருந்த மூன்று துறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித்துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கியது.
இரத்தம் சிந்திப் போராடி உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமைகள் குறித்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில், 1969 ஆம் ஆண்டில் மே முதல் நாளைச் சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது.
1969-ல் அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க வகை செய்தது பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கற் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி, அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது
தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது.
போல் "பணிக்கொடை" வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில்-விபத்து நிவாரண நிதித் திட்டத்தை உருவாக்கியது, என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications