பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-3 சீசனை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான பின்னர் கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பதால் காரசார அரசியல் இருக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் பணிகளை தீவிரமாக முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பிக்பாஸ் 3-வது சீசன்
இந்த நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ்-3 -வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். மேலும் தாம் கட்சித் தலைவரானதால் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாகவும் கமல்ஹாசன் கூறி வந்தார்.

தலைவன் இருக்கின்றான்
இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரகுமான், கமல்ஹாசனுடன் விவாதிக்கும் ஒரு படத்தை வெளியிட்ட்டிருந்தார். பின்னர்தான் ராஜ்கமல் பிலிம்ஸின் தலைவன் இருக்கின்றான் என்கிற திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரகுமானுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார் என்கிற தகவல் வெளியானது.

மநீமவுக்கு பிரசாந்த் கிஷோர்
மநீம ஒரு பக்கம் இருக்க கமல்ஹாசன் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருப்பது கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. அதுவும் மநீமவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தர பிரசாந்த் கிஷோர் வந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார்.

காரசார அரசியல் படம்?
அதனால் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் திரைப்படம் நிச்சயம் அரசியல் படமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. தாம் மக்களிடம் சொல்ல விரும்பும் கருத்துகளை ஆணித்தரமாக அதிரவைக்கும் வகையில் இப்புதிய படத்தில் கமல்ஹாசன் வெளிப்படுத்தக் கூடும் என தெரிகிறது.
சினிமாவும் ஒரு பிரசார ஆயுதமே!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications