இந்திய இறையாண்மைக்கும் இந்திய ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருப்பேன்.. முஸ்லீம் அமைப்புகளிடம் கமல்
சென்னை: இந்திய இறையாண்மைக்கும் இந்திய ஒற்றுமைக்கும் உறுதியாக இருப்பேன் என முஸ்லீம் அமைப்புகளிடம் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது அறிக்கையில் கூறுகையில் இன்று கமல்ஹாசன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து பேசினார். இவர்களுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லீம் அசோசியேசனைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து அதற்கு எதிர்ப்பான நிலையை மேற்கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் போராட்டமாக இது மாறுவதற்கு தங்கள் ஆதரவு வேண்டுமென்று கமல்ஹாசனை கேட்டுக் கொண்டனர். எப்போதும் எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாகதான் இருப்பேன் என்று உறுதி கூறினார்.

போராட்டம் உறுதியாகவும் வலிமையாகவும் நடத்திட வேண்டும். அதே நேரம் எந்த வகையிலும் அதில் வன்முறை புகுந்து விடக் கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார். கமலின் கருத்துக்கு அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து தங்கள் ஒத்துழைப்பு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் கமல்ஹாசனுக்கு இருக்கும் என தெரிவித்தனர்.
-
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications