• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எல்லாத்துக்கும் "இவர்"தான் காரணம்.. அதிமுகவுக்கு சீட் கிடைக்கவும்.. திமுக சறுக்கவும்.. ஜஸ்ட் பாஸ்!

|

சென்னை: யார் சொன்னது கொங்குவில் அதிமுகவை ஜெயிக்க வெச்சதே சாதிதான் என்று.. அப்படி எதுவுமே கிடையாது. உண்மையில் ஜாதி அலையெல்லாம் பெருசாக வீசவும் இல்லை. கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வி அடையவும், அதிமுக ஜஸ்ட் பாஸ் ஆகவும் காரணமாக இருந்தே மக்கள் நீதி மய்யம் பிரித்த வாக்குகள்தான் என்பது தெரியவந்துள்ளது!

இந்த முறை திமுக பிரம்மாண்டமான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், வெற்றியை மட்டும் பெற்றுள்ளது.. அதிமுகவோ கருத்து கணிப்புகளில் எதிர்பார்க்காததைவிட கூடுதல் தொகுதிகளை பெற்றுள்ளது. இதில், அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ள 75 தொகுதிகளில், 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் வருகிறது..

ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. மணமேடையில் திடீரென அந்த கேள்வி கேட்ட மணப்பெண்.. சோகத்தில் மாப்பிள்ளை

அதிமுகவின் மானத்தை காப்பாற்றி கரை சேர்த்தது மேற்கு மாவட்டங்கள் தான்...கொங்கு மண்டலத்தில் மட்டும் அதிமுகவுக்கு அடி விழுந்திருந்தால் மிகவும் மோசமான நிலைக்கு அது போயிருக்கும். இதை எதிர்பார்த்துதான் ஆரம்பத்திலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி வந்தார். பாஜகவுக்கு அதிக சீட்களை ஒதுக்காமல் ஓரம் கட்டி வைத்தார்.

 வாக்கு வங்கி

வாக்கு வங்கி

கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் என 10 மாவட்டங்கள் கொங்கு பெல்ட்டில் வருகின்றன.. இந்த மாவட்டங்களில் மொத்தமாக 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன.. இந்த 68 தொகுதிகளில் 44 தொகுதிகளில் அதிமுக வெற்றியை பதித்துள்ளது.. மிச்சமுள்ள 24 தொகுதிகளைதான் திமுக கூட்டணி பெற்றுள்ளது. அதிலும், எப்போதும் போலவே, கோவை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள்தான் அதிமுகவின் வாக்கு வங்கியை உயர்த்தி இருக்கின்றன..

 இரட்டை இலை

இரட்டை இலை

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலையே வெற்றி பெற்றுள்ளன.. ஆனால், அனைத்து அதிமுக வேட்பாளர்களுமே அபார ஓட்டுக்களை பெற்றுவிட்டார்களா என்றால் இல்லை... எஸ்பி வேலுமணி உட்பட வெகுசிலரே நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளனர்.. ஆனால், இது அதிமுகவுக்கான வெற்றி இல்லை.. 10 வருடம் ஆட்சியில் இருந்துள்ளனர்.. கொங்கு மண்டலத்துக்கு செய்து தரப்படாத நலத்திட்டங்களே இல்லை.. வளம் கொழிக்கிறது அந்த மண்டலம்.. அந்தஅளவுக்கு கொங்கு அமைச்சர்கள் விழுந்து விழுந்து செய்தும், வாக்கு சதவீதம் பெரிதாக உயரவில்லை.

 அண்ணா

அண்ணா

கொங்குவில் அதிமுக மீண்டும் வெற்றி பெறுவதற்கு காரணமே சாதி ஓட்டுக்கள்தான் என்றார்கள். இதற்கு பொள்ளாச்சி சம்பவத்தையும் முன்னிறுத்தி சோஷியல் மீடியாவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.. "அண்ணா.. என்னை விட்டுடுங்க..ண்ணா"என்று கெஞ்சிய இளம் பெண்களின் கதறல்கள் கேட்கவில்லையா? அந்த பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்கியது தெரிந்தும், ஜாதி இவர்களின் கண்ணை மறைக்கிறதா? மக்களை எப்படித்தான், எதை வைத்துதான் புரிந்து கொள்வது என்ற கேள்விகள் எழுந்தன.

 பொள்ளாச்சி

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் அதிமுக வெற்றி பெற்றது உண்மையிலேயே ஆச்சரியம் என்றாலும், அதற்கு சாதிதான் அடிப்படை காரணமாக இருக்க முடியாது.. அப்படி பார்த்தால் மொத்த கொங்குவிலும் அதிமுக அதிக ஓட்டு சதவீதத்தை பெற்றிருக்கும்.. அப்படியானால் திமுக சறுக்கியதற்கும், அதிமுக தப்பித்தற்கும் யார் காரணம் என்றால், அங்குதான் கமல் என்ட்ரி ஆகிறார்.

 சீமான்

சீமான்

சீமான் எப்படி அதிமுகவின் வாக்குகளை பிரித்தாரோ, அதுபோல, திமுகவின் வாக்குகளை கமல் பெருமளவு பிரித்திருக்கிறார்.. குறிப்பாக கோவை மாவட்டத்தில். இங்கு திமுக , அதிமுக இடையே பெரிய அளவில் வாக்கு வித்தியாசம் இல்லை. திமுக தோற்ற தொகுதிகளில் எல்லாம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெரும் வாக்குகளைப் பிரித்துள்ளனர். அப்படி நடக்காமல் போயிருந்தால் பெருமளவில் திமுகதான் ஜெயித்திருக்கும்.

மய்யம்

மய்யம்

கமல் போட்டியிட்ட தொகுதி முஸ்லீம் வாக்குகள் நிறைந்த தொகுதி.. வாக்கு எண்ணிக்கையின்போதே நிறைய முஸ்லிம் வாக்குகள் கமலுக்கு டிரான்ஸ்பர் ஆனதாக சொல்லப்பட்டது.. இது அப்படியே திமுகவின் வாக்குகளாம்.. கமல் இந்த முறை அங்கு போட்டியிட்டுவிடவும், திமுகவுக்கு போன வாக்குகள் பிரிந்து சிதறின.. கடைசியில் இது அதிமுகவின் வெற்றிக்கு அடிகோலிவிட்டது. மய்யம் வேட்பாளர்களுக்கு கோவை மாவட்டத்தில் நகர்ப்புற தொகுதிகளில் பெரும் வாக்குகள் கிடைத்துள்ளன... கமல்ஹாசன் ஏற்படுத்திய தாக்கமே இதற்கு காரணம். இதுதான் அதிமுகவுக்கு சாதகமாகி விட்டது.

 கோவை

கோவை

ஒரு வேளை கமல் கோவையில் போட்டியிடாமல் இருந்திருந்தால், நிச்சயம் கோவையில் பல தொகுதிகளில் திமுகதான் வென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே அதிமுகவுக்கு ஆதரவான அலை என்று தனியாக பெரிதாக எதுவும் வீசவில்லை. வழக்கமாக இது அதிமுக பகுதிதான். ஆனால் கமல் வந்ததால் இந்த முறை திமுகவுக்கான வாய்ப்பு பறி போயுள்ளது.

பெரிய

பெரிய

எனவே, ஜாதி அலை வீசியதாகவோ அல்லது அதிமுகவுக்கு முழுமையாக கொங்கு மண்டலம் இருப்பதாகவோ சொல்ல முடியாது.. அதேசமயம், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு வேலுமணி போல ஒரு தலைவர் இல்லை என்பது பெரிய குறைதான். கார்த்திகேய சிவசேனாதிபதி மிக அழகாக திட்டமிட்டு பணியாற்றினார். இதனால்தான் வேலுமணியை பெரிய அளவு வித்தியாசத்தில் வெல்ல விடாமல் தடுக்க முடிந்தது.

 பணி

பணி

திமுகவினர் இதேபோல எப்போதும் களப் பணியாற்றினால், ஒரு பெரிய தலைவர் அங்கு உருவானால் நிச்சயம் கொங்கு மண்டலத்தையும் திமுகவால் எதிர்காலத்தில் எளிதாக வெல்ல முடியும். இதுதான் எதார்த்தம். இதைத்தான் கார்த்திகேய சிவசேனாதிபதியும் தனது அறிக்கையில் நேற்று மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

 
 
 
English summary
Kamalhasan divides DMK votes in Kongu Region
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X