கெஜ்ரிவாலா அப்படி பேசினார்.. ஆச்சரியத்தில் தமிழர்கள்.. பரபரக்கும் "தமிழ் மாணவர் விரோத பிரச்சாரம்"

அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்ச்சை வீடியோ குறித்து கமல்ஹாசன் என்ன பதில் சொல்ல போகிறார்?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கெஜ்ரிவாலா அப்படி பேசினார்.. ஆச்சரியத்தில் தமிழர்கள்- வீடியோ

    சென்னை: ஊழலுக்கு எதிரானவர்கள் என்று முழக்கமிட்டு கொண்டு வந்தபோது எல்லோரும் திகைத்து போய் வாயை பிளந்து கொண்டு ஆம் ஆத்மி கட்சியை பார்த்தார்கள்! ஆனால் இப்போது?!!

    துடைப்பம் சின்னத்தை வைத்து கொண்டு மக்களிடம் எளிதாக சென்று, குறிப்பாக இளைஞர்களை வளைத்து போட்டு அன்று மேலே எழுந்து வந்தது கட்சி!

    இதனால் அப்போது நடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி பெரிய சவாலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை உறுதிபடுத்தும் வகையில், நிறைய வரவேற்பும் கிடைத்தது.

    பாராட்டு

    பாராட்டு

    அவ்வளவு எதற்கு? ஊழலுக்கு குரல் கொடுத்ததால், அங்க டெல்லியில் இருக்கிற கெஜ்ரிவாலுக்கு இங்க இருக்கிற தமிழகத்திலேயே பாராட்டுக்கள் எழுந்தன. (ஏனென்றால் இங்கு ஊழல் ஆட்சிகளில் நாம் அவ்வளவு பட்டுவிட்டோம்). இடை இடையே சிற்சில சலசலப்புகள் எழுந்தாலும் கூட ஆம் ஆத்மி தொடர்ந்து வலுவாகவே உள்ளது. தலைநிமிர்ந்தும் நடை போடுகிறது.

    தமிழக மாணவர்கள்

    தமிழக மாணவர்கள்

    ஆனால் லோக்சபா தேர்தலில் டெல்லியில் வாட்ஸ் ஆப் மூலமாக ஆம் ஆத்மி செய்து வரும் ஒரு பிரச்சாரம் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. திடீரென தமிழக மாணவர்களை குறி வைத்துள்ளார் கெஜ்ரிவால். வெளிமாநில இளைஞர்களால், குறிப்பாக தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களுக்கு டெல்லி பல்கலை வாய்ப்புகள் தட்டி போகின்றன என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

    கர்நாடகத்துக்காரர்

    கர்நாடகத்துக்காரர்

    இதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. (பிரகாஷ் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. காரணம், அவர் கர்நாடகத்துக்காரர்.. அப்படித்தான் பேச முடியும்.) ஆனால் ஆம் ஆத்மியின் இந்த வினோத பிரச்சாரத்தில் 2 அபாயங்கள் உள்ளன. ஒன்று, தமிழக மாணவர்கள் மற்றும் பிற மாநில மாணவர்களிடையே பிளவு ஏற்படும். இரண்டாவது, நல்லிணக்கத்துடன் தலைநகரில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும், பிற மொழியினருக்கும் இடையே தேவையில்லாத துவேஷம் உருவாகி விடும். (டெல்லியில் பல்வேறு மொழிக்காரர்களும், பிற மாநிலத்தவருமே அதிக அளவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது)

    கவுரவம்

    கவுரவம்

    முன்பு சிவசேனா இப்படித்தான் இன ரீதியான துவேஷத்தை கையில் எடுத்தது. தமிழர்களை இழிவுபடுத்தியது, விரட்டியது. ஆனால் தமிழர்களின் உழைப்பு, விசுவாசம் உள்ளிட்டவற்றைப் புரிந்து கொண்டு பால் தாக்கரேவே தமிழர்களை அரவணைக்கத் தொடங்கினர். இன்று மும்பையில் தமிழர்கள் கெளரவமாக வாழ்ந்து வருகின்றனர்.

    பிளவு

    பிளவு

    எல்லா தலைவர்களும் போல கிடையாது, நல்லவர், நேர்மையானவர், எளிமையானவர் என பெயரெடுத்த கெஜ்ரிவால் ஏன் இப்படி ஒரு திடீர் பிரச்சாரத்தில் குதித்தார் என்பது தெரியவில்லை. இன ரீதியான பிளவை ஏற்படுத்தி என்ன பலனை அறுவடை செய்ய போகிறார் என்பது புரியவில்லை. ஒருவேளை இதுதான் டெல்லி பாலிட்டிக்ஸா அல்லது கெஜ்ரிவாலை நாம்தான் தப்பாக பார்த்து விட்டோமா என்ற எண்ணத்தையே இது ஏற்படுத்துகிறதா.

    நிறைய மரியாதை

    நிறைய மரியாதை

    நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் என்ற முறையில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தந்திருக்கிறார். அது நமக்கு தேவையில்லை. ஆனால் இங்குள்ள கமல் கெஜ்ரிவாலின் பேச்சுக்கும் செயல்பாட்டுக்கும் என்ன சொல்ல போகிறார். ஊழல் எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு மக்களின் மனதைக் கவர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது நிறைய மரியாதை வைத்துள்ளவர் கமல்.

    கமல் பதில் என்ன?

    கமல் பதில் என்ன?

    ஊழல் எதிர்ப்பு விவகாரத்தில் கமலின் முன்னோடி இவர்தான். கிட்டத்தட்ட இன்னொரு கெஜ்ரிவாலாக தமிழகத்தில் உருவெடுக்கும் திட்டம்தான் கமல் மனதில் உண்மையில் உள்ளது என்று கூட கருதப்பட்டது. அப்படி இருக்கும்போது, கமலின் நிலைப்பாடு என்ன? நண்பர், ஆசான் என்ற முறையில் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது ஆலோசனை சொல்வாரா? அறிவுரை தருவாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    நல்ல உதாரணம்

    நல்ல உதாரணம்

    ஆனால் ஒன்று, அநியாயங்களை எதிர்த்து போராடுபவர்கள் எல்லோருக்குமே ஆட்சி செய்யும் தகுதியோ, திறமையோ வந்து விடுவதில்லை என்பதற்கும், தன்னை நிலைநிறுத்தி கொள்ள எந்தவிதமான கொள்கை அரசியலையும் கையில் எடுத்துவிடுவார்கள் என்பதற்கும் கெஜ்ரிவால் ஒரு நல்ல உதாரணம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+