தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது அலட்சியம் காட்டக்கூடாது - கமல்
மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்க்கைமுறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும் நாமேதீர்வு என்று பதிவிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை வீட்டிற்குள் முடங்கியிருந்த மக்கள் இன்று காலை முதலே வீடுகளை விட்டு சுதந்திரமாக வெளியே வரத் தொடங்கியுள்ளனர். கோவில்கள், கடை வீதிகளில் ஏராளமான மக்கள் நடமாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன், இந்நோயில் இருந்து, நம் வாழ்க்கைமுறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும் நாமே தீர்வு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்க்கைமுறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும். #நாமேதீர்வு என்று பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை.
ஷாப்பிங் மால்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் நாமே தீர்வு என்று பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications