லேடீஸ் என் பிரெயினை மாத்திட்டாங்க.. விஜய் முதல்வராகலேன்னா, எல்லாரையும் சாகடிப்பேன்: திகில் தொண்டர்
சென்னை: சென்னை நீலாங்கரை வீட்டின் முன்பு இப்படியொரு பரபரப்பு நடந்துள்ளது. "என் பேரு S.விஜய்.. நான் விஜய்யின் பிரதிபலிப்பு.. என் பிரதிபலிப்புதான் விஜய்.. இப்போதே விஜய் ஆட்சி அமைக்கணும்.. இல்லாவிட்டால் நான் தியானம் பண்ண ஆரம்பிச்சிடுவேன்.. யாரை அழிக்கணுமோ, அவங்களை அழிச்சிடுவேன்" என்று ஆக்ரோஷத்துடன் கர்ஜித்துள்ளார் தவெக தலைவர் விஜய்யின் தொண்டர் ஒருவர்..
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாததால் அரசியல் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

தனது கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான ஆதரவு கடிதங்கள் இல்லாத காரணத்தால், த.வெ.க தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இன்னும் அழைக்கவில்லை.
இந்தச் சூழலில், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்க்கு உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் வீட்டின் முன்பு தொண்டர் அலப்பறை
அதேபோல சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பும் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. அங்கு குவியும் ரசிகர்களும், தொண்டர்களும் விஜய் ஆட்சியமைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.. இந்த பரபரப்பில் விஜய்யின் தீவிர தொண்டர் ஒருவர் செய்த அலப்பறை அங்கிருந்தவர்களையே மிரள வைத்தது..
செய்தியாளர்களிடம் அந்த நபர், "எல்லா மீடியாக்காரர்களும் நோ டென்ஷன். ரிலாக்ஸ் ஆகுங்க.. என்சொந்த ஊரு கிருஷ்ணகிரி.. 2 தவெக தொகுதியை நான் வெற்றி பெற வைத்தேன்.. என் தளபதி அங்கே வரல.. என் தளபதியை எந்த ஊரில் தடுத்தாங்களோ, அங்கே நான்தான் எப்போதும் ரவுண்ட்ஸில் இருப்பேன்.. இதை என் தளபதி கிட்டயே நான் பேசிக்கிறேன்..
மாம்பழத்துடன்தான் கூட்டணி
இன்று ஆட்சியமைப்பதற்கு கூட்டணி பேச வேண்டும்.. எந்த நாளில் அவர் ஆட்சியில் உட்கார வேண்டும் என்பதற்கான 20 பொருத்தத்தையும் நான் தளபதியிடம் தந்துவிட்டு போவேன்.. இதை பற்றி வேறு யாரிடமும் பேச நான் தயாராக இல்லை.. தவெக கூட்டணி மாம்பழத்துடன்தான்.. திருமாவளவனை கூப்பிட்டும் அவர் வரல.. விசிக வந்தால் வெற்றி வாய்ப்பு உண்டு.. அப்படி திருமா வராவிட்டால் விஜயகாந்த் கட்சி, உடனே வந்தாகணும்..
நான் இங்கயே உக்கார்ந்து தியானம் பண்ணுவேன்... யார் யாரை சாகடிக்கணுமோ, சாகடிச்சிடுவேன்.. யார் யாரை வாழவைக்கணுமோ வாழ வைப்பேன்.. நான் ரொம்ப கெட்டவன்.. என்னை யாரும டென்ஷன் மட்டும் பண்ணாதீங்க.. நீங்கள் எல்லாரும் அமைதியா இருந்தாலே, இங்கேயே நீலாங்கரையிலேயே தியானம் செய்வேன்
லேடீஸ் என் பிரெயினை மாத்திட்டாங்க
வடக்கு ஒன்றியம் தபா சிவா என்னுடைய மாமன்.. அவர் ஜெயிக்க வேண்டியவர்.. 111 என்று லீடிங்கில் இருந்தது.. ஆனால் லேடீஸ் எல்லாம் சேர்ந்து என் பிரெயினை மாத்திட்டாங்க.. என் பிரதிபலிப்புதான் விஜய், விஜய்யின் பிரதிபலிப்புதான் நான்.. இந்த உலகத்தையே ஆள பிறந்தவன் நான்" என்றெல்லாம் த.வெ.க தலைவர் விஜய் வீட்டு வாசலில் அலப்பறை செய்தார்..
அடிக்கடி அங்கிருந்த பாதுகாப்பு போலீசாரிடமும், நான்தான் விஜய், என் பெயர்தான் விஜய்.. இந்த உலகம் என்னுடையது" என்றெல்லாம் சொன்னார்.
போலீசாரும் அவர் சொன்னதை அமைதியாக கேட்டு கொண்டனர். அதேசமயம் எந்த அசம்பாவிதமும் நடக்காதவாறு, அவரை கண்காணித்தபடியே இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications