வைகோ எங்க ஆளுக.. களத்தை சூடாக்கும் ’கம்மா’ நாயுடு மாநாடு! 30 எம்எல்ஏ, துணை முதல்வர் பதவி வேண்டுமாம்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு சமுதாய அமைப்புகளும் தேர்தலையொட்டி பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் பிப்ரவரி 6ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் கம்மா மாநாடு நடைபெற இருக்கிறது. கம்மா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 30 எம்எல்ஏக்கள், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. எந்த கட்சிக்கு இந்த அமைப்பு ஆதரவாக செல்ல போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது. திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட முக்கிய அரசியல் கூட்டணிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டன.
ஒரு வாக்காளரையும் தவற விடக்கூடாது என்ற நோக்கத்தில் தேர்தல் அறிக்கைகள், பிரச்சார திட்டங்கள், கூட்டணி கணக்குகள் என அனைத்தும் வேகமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தல் சூழலில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பல்வேறு சமுதாய அமைப்புகளும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன.

2026 தேர்தல்
சமீப நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் சாதி மற்றும் சமுதாய அமைப்புகள் மாநாடுகளை நடத்தி வருகின்றன. சில அமைப்புகள் திடீரென உருவாகி, ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதும் அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படியான சூழலில்தான், கம்மா சமூகம் தமிழக அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. கம்மா குளோபல் ஃபெடரேஷன் என்ற அமைப்பு, வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் 'கம்மா மகாநாடு' என்ற பெயரில் மாபெரும் மாநாட்டை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
கம்மா சமூகம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலங்களிலும் வசிக்கும் கம்மா சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைப்பதே இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக ஒற்றுமை, அரசியல் எதிர்காலம், வளர்ச்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு போன்ற விஷயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கம்மா அல்லது கம்மவார் நாயுடு என அழைக்கப்படும் இந்த சமூகம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பரவலாக வசித்து வருகிறது.
சாதி அரசியல்
வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் போர் வீரர்களாகவும், நில உரிமையாளர்களாகவும் திகழ்ந்த இந்த சமூகம், காலப்போக்கில் விவசாயம், வணிகம், கல்வி மற்றும் அரசியல் துறைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கம்மவார் நாயுடு என்ற பெயரில் இவர்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். உலகளவில் 2.1 கோடிக்கும் அதிகமான கம்மா மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்திய மக்கள்தொகையில் சுமார் 1.5 சதவீதம் ஆகும்.
கம்மா குளோபல்
தமிழ்நாட்டில் மட்டும் 65 லட்சத்திற்கும் அதிகமான கம்மா மக்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை, தமிழக அரசியலில் ஒரு கணிசமான வாக்கு வங்கியாக பார்க்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தவே 'கம்மா குளோபல் கூட்டமைப்பு' உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள கம்மா, கம்மவார் நாயுடு மற்றும் சவுதரி பிரிவுகளை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரம் பெறுவதே KGF-இன் முக்கிய இலக்காக முன்வைக்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் மாநாடு
அதன் ஒரு பகுதியாகவே, ஸ்ரீபெரும்புதூரில் இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற கம்மா உச்சிமாநாட்டில் தெலங்கானா முதல்வர் கலந்து கொண்டார். ஆனால், தமிழகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமே அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் யார் இதில் பங்கேற்பார்கள் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
ஜி.டி. நாயுடு, வைகோ
பொல்லினேனி முனுசுவாமி நாயுடு, ஜி.டி. நாயுடு, வைகோ போன்றோர் தமிழக அரசியலில் கம்மா சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களாக கடந்த காலங்களில் அறியப்பட்டவர்கள். தற்போதைய அரசியல் சூழலில், KGF குறைந்தது 30 கம்மா எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்து சட்டப்பேரவையில் வலுவான இருப்பை உருவாக்க வேண்டும் என்ற இலக்கையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சூழ்நிலை சாதகமாக இருந்தால், துணை முதலமைச்சர் பதவி உள்ளிட்ட அதிகாரப் பங்குகளையும் கோர திட்டமிடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
தேர்தல் கோரிக்கைகள்
கலாச்சாரம், கல்வி, வணிகம், சமூகப் பொறுப்பு போன்ற துறைகளில் முன்னிலையில் இருக்கும் கம்மா சமூகம், அரசியலில் மட்டும் ஏன் பின்தங்க வேண்டும் என்ற கேள்வியையே இந்த மாநாட்டின் மையமாக KGF முன்வைக்கிறது. இந்த மாநாடு தமிழக அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும், எந்த கட்சிக்கு இது சாதகமாக அமையும் என்பதெல்லாம் தேர்தல் நெருங்கும் போது தான் தெளிவாகும். ஆனால், 2026 தேர்தல் களத்தில் கம்மா சமூகம் ஒரு புதிய அரசியல் ஆதிக்க குழுவாக மாற வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications