காஞ்சிபுரத்தில் சித்தின்னு கூட பார்க்காமல்.. இளைஞர் துரை செய்த காரியம்.. ஆடிப்போன ஊர் மக்கள்
சென்னை: காஞ்சிபுரம் தாலுகா வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது தம்பி துளசிராமன். இவர்கள் இருவரும் ஒரே மனையில் முன்னும் பின்னும் தனித்தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களின் வீட்டின் எதிரே உள்ள ஏரிக்கரையில் அரசு நிலத்தில் ஆடு, மாடு, கட்ட கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் விவகாரத்தில் சித்திக்கே இளைஞர் எமனாக மாறி உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு பெரியஅளவில் உயர்ந்துவிட்டது. சென்னையில் பணம் படைத்த பலரும், சென்னையின் புறநகர் பகுதிகளில் நிலத்தை வாங்கு குவித்து வருகிறார்கள். இதனால் நிலத்தின் மதிப்பு கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு உயர்ந்துவிட்டது.

நிலத்தின் மதிப்பு கடுமையாக உயர்வதால், அரசு நிலத்தை ஆக்கிரமிக்க இன்றைக்கு சிலர் தயங்குவது இல்லை. பட்டா இடத்துடன் அரசு இடத்திலும் சேர்த்து வீடு கட்டுவதும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. சிலர் ஆட்டு கொட்டகை, மாட்டுக்கொட்டகை, கோயில் கட்டுவது போன்ற வகையில்அரசு சொத்தை ஆக்கிரமிக்க முயல்கிறார்கள். அப்படித்தான் காஞ்சிபுரத்தில் சம்பவம் நடந்துள்ளது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
காஞ்சிபுரம் தாலுகா வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி வசித்து வருகிறார். கண்பார்வை சரியாக தெரியாது. இவரது மனைவி துளசிக்கு 40 வயது ஆகிறது.இவர்களுக்கு 20 வயதில் மகனும், 18 வயதில் மகளும் உள்ளனர். சுப்பிரமணியின் தம்பி துளசிராமன். அண்ணன் தம்பி இருவரும் ஒரே மனையில் முன்னும் பின்னும் தனித்தனியாக வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இவர்களின் வீட்டின் எதிரே உள்ள ஏரிக்கரையில் அரசு நிலத்தில் ஆடு, மாடு, கட்ட கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள்.
இந்த ஏரிக்கரை அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் சுப்பிரமணி, துளசிராமன் குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையில் துளசிராமனின் மனைவியான சுமதிக்கும் , சுப்பிரமணியின் மகனான 30 வயதாகும் துரைக்கும் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதில் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த துரை, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சித்தி சுமதியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார் இதில் படுகாயம் அடைந்த சுமதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சுமதி ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுமதியை கத்தியால் தாக்கி கொன்று விட்டு தப்பி ஓடிய துரையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications