கனிமொழிக்கு திமுகவில் முக்கிய பதவி உறுதி? - இன்னும் 3 நாட்களில் அறிவிப்பு? - சிறகடிக்கும் தகவல்!
சென்னை : சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி திமுக எம்.பி கனிமொழிக்கு வழங்கப்பட உள்ளதாக திமுக வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன.
துணை பொதுச்செயலாளர் பதவிக்கான மகளிர் ஒதுக்கீட்டில், தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா, பூங்கோதை ஆலடி அருணா, டாக்டர் கனிமொழி சோமு, கீதா ஜீவன் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன.
குடும்ப அரசியல் என்ற விமர்சனங்கள் திமுக மீது தொடர்ந்து எழுந்து வரும் நிலையிலும், கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவோடு கனிமொழியே துணை பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட இருக்கிறார் என தகவல்கள் வருகின்றன.

திமுக உட்கட்சி தேர்தல்
திமுகவின் உட்கட்சித் தேர்தல் 99 சதவீதம் முடிந்துவிட்டது. இனி, திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை நடக்கிறது. தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின். தனது வேட்பு மனுவை அவர் நாளை காலையில் தாக்கல் செய்கிறார். அவர் போட்டியின்றி ஏகமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

தலைவர் தேர்தல்
தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, வரும் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் தற்போதைய சட்டவிதிகளின் படி, 5 பேர் துணைப் பொதுச்செயலாளர்கள் இருக்கிறார்கள்.

துணை பொதுச் செயலாளர்கள்
ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் துணை பொதுச் செயலாளராக இருக்கின்றனர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதில், மகளிருக்கான ஒதுக்கீட்டில் துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்தில் அடுத்து யார் வருவார் என்ற பெரிய கேள்வி எழுந்தது.

கனிமொழி
இந்த பதவிக்காக அடிபடும் பெயர்களில் ஆரம்பத்தில் இருந்தே முன்னணியில் இருந்து வருகிறது கனிமொழி கருணாநிதி பெயர். துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அப்பகுதியில் இருந்தே ஒருவர் நியமிக்கப்படக்கூடும் என்ற யூகங்களும் எழுந்தன. ஆனால், கொங்கு மண்டலத்தில் இருந்து முக்கியமான பெண் தலைவர்கள் இல்லை என்பதால், அதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.

ரேஸில் 5 பேர்
அடுத்த துணைப் பொதுச் செயலாளர் யார் என்ற பட்டியலில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி, பூங்கோதை ஆலடி அருணா, டாக்டர் கனிமொழி சோமு, கீதா ஜீவன், புதுக்கோடை விஜயா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இதில், புதுக்கோட்டை விஜயா சில நாட்களுக்கு முன்னர் தலைமைக் கழகத்திற்கு வந்து சென்றதும் இந்தப் பேச்சை இன்னும் பரபரப்பாக்கியது. இந்த பட்டியலில், கீதா ஜீவனுக்கு மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் துணை பொதுச் செயலாளர் பதவி ரேஸில் இல்லை என்று கூறப்படுகிறது.

விரும்பவில்லை
கனிமொழி, திமுக மகளிரணி செயலாளராகவும், தூத்துகுடி எம்.பியாகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அவர் துணை பொதுச் செயலாளர் பதவியை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழிக்கு அந்தப் பதவியைக் கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்றனர் திமுகவினர்.

கனிமொழிக்கு உறுதி
இந்நிலையில், தற்போது திமுக மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழிதான் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட இருக்கிறார் என திமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. கனிமொழி திமுக மகளிரணி செயலாளர் பொறுப்பிலும் தொடர்வார் என்று கூறப்படுகிறது. மகளிரணிக்கு புதிய செயலாளரை கனிமொழி தேர்வு செய்து தலைமைக்கு தெரிவிக்கும் வரை அவரே அப்பதவியிலும் தொடர்வார் என்று கூறப்படுகிறது.

7 ஆண்டுகள் முன்பே
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து 2016இல் மறைந்த சற்குணா பாண்டியன் வயது முதிர்வின் காரணமாக அந்தப் பதவியை கனிமொழிக்கு அளிக்குமாறு அப்போது கருணாநிதியிடமே கோரிக்கை வைத்தார். ஆனால், கருணாநிதி, சுப்புலட்சுமி ஜெகதீசனை துணை பொதுச் செயலாளர் ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினை சந்தித்தபோது
தனது சிறப்பான பணிகளின் காரணமாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று சென்னையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி. இந்நிலையில் தான் அவரே அடுத்த துணைப் பொதுச் செயலாளர் என்ற தகவல்கள் அறிவாலய வட்டாரத்தில் சிறகடிக்கின்றன.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர்












Click it and Unblock the Notifications