சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..!

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மாரீஸ்வரன் சக்திவேலுக்கு திமுக எம்.பி. கனிமொழி நிதியுதவி வழங்கியதுடன் புத்தகம் ஒன்றையும் பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி.க்கு விரைவில் புதிய பதவி... கொங்கு மண்டல தோல்விக்கான காரணம் கண்டறிய திட்டம்..!கனிமொழி எம்.பி.க்கு விரைவில் புதிய பதவி... கொங்கு மண்டல தோல்விக்கான காரணம் கண்டறிய திட்டம்..!

Kanimozhi provided financial assistance to a young hockey player

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 20 வயது இளம் ஹாக்கி வீரரான மாரீஸ்வரன் சக்திவேல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் ஹாக்கி பயிற்சி பெற்றவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து மாரீஸ்வரனுக்கு, தேவையான விளையாட்டு உபகரணங்களை, கனிமொழி எம்.பி. வழங்கி, பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைத்தார்.

Kanimozhi provided financial assistance to a young hockey player

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவிருக்கும் FIH ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான, இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு மாரீஸ்வரன் சக்திவேல் தேர்வாகியுள்ளார். நாளை தொடங்கவுள்ள இந்திய அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ள மாரீஸ்வரன் சக்திவேல், இன்று கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாரீஸ்வரன் சக்திவேலுக்கு, கருணாநிதி : எ லைஃப் என்ற புத்தகம் மற்றும் நிதியுதவி வழங்கிப் பாராட்டு தெரிவித்தார் கனிமொழி எம்.பி., மேலும் சிறப்பாக விளையாடி பிற்காலத்தில் அதிகளவிலான தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.

English summary
Kanimozhi provided financial assistance to a young hockey player
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X