வ.உ.சி 150வது பிறந்தநாள் விழா: கப்பலோட்டிய தமிழன் விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கூடிய ‘கப்பலோட்டிய தமிழன் விருது’ வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாக கடைபிடிக்கப்படும் எனவும் ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என்றும் தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Recommended Video
செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் பெருமைக்குரியவர் வ.உ. சிதம்பரனார். கப்பலோட்டிய தமிழன் என்றும் அழைக்கப்படுகிறது. அவரது 150வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று விதி 110ன்கீழ் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் , தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சேலை வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளையொட்டி புதிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார்.

வ.உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும். கோவை வ.உ. சிதம்பரனார் பூங்காவில் வ.உ. சிதம்பரனாரின் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்றார்.
ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ. சிதம்பரனாரின் வீடு புதுப்பிக்கப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
கப்பல் தொடர்பான துறைகளில் சிறந்த பங்காற்றி வரும் தமிழருக்கு ஆண்டுதோறும் வ.உ.சி பெயரில் "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது" வழங்கப்படும் என சட்டசவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
வ.உ.சி. எழுதிய புத்தகங்கள் புதுக்கப்பட்டு பாடநூல் கழகம் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டிடங்களுக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படும், என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications