காரைக்காலில் கடற்கரையில் சில்மிஷம்! புதுச்சேரி போலீஸ் பூத்தில் ராஜ்குமார் அசிங்கம்! அரசு வேலை போச்சே
சென்னை: பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய போலீசாரே சிலசமயம் தங்களது பொறுப்பை மறந்துவிடுகிறார்கள்.. வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது? புதுச்சேரியில் அப்படித்தான் ஒரு போலீஸ்காரர் பெண்ணிடம் அத்துமீறியிருக்கிறார்.. இதனால் துறை ரீதியான நடவடிக்கைக்கும் ஆளாகி, இன்று அரசு பணியையே இழக்கும் நிலைமைக்கு சென்றுவிட்டார்.. என்ன நடந்தது?
கோவை மாணவியின் பலாத்கார சம்பவ அதிர்ச்சி இன்னும் தமிழகத்தை விட்டு நீங்கவில்லை.. 3 நபர்களால் கத்தியால் தாக்கப்பட்ட காதலன் கண்விழித்து தகவல் தந்ததுமே, உடனடியாக போலீசார் ஏர்போர்ட் பின்புறமுள்ள பகுதிக்கு விரைந்துள்ளனர்..

சபாஷ் போலீஸ்
உடன்டியாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைத்தனர். ஒரே நாளில் இரவோடு இரவாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையுமே சுட்டுப்பிடித்தனர். இந்த அளவுக்கு துரிதமாக காவல்துறை தன்னுடைய கடமையை செய்துள்ளது.
கோவை சம்பவம் போலவே எண்ணற்ற குற்ற சம்பவங்களில் தமிழக போலீசாரின் அதிரடிகள் பாராட்டத்தக்க வகையிலேயே அமைந்து வருகிறது.
எனினும் ஒருசில போலீசார் தங்களது கடமையை மறந்து செயல்படுவது, ஒட்டுமொத்த காவல்துறைக்கே சங்கடத்தை தந்துவிடுகிறது.. தமிழகத்தின் அருகிலுள்ள புதுச்சேரியில் அப்படித்தான் ஒருவர் அசிங்கப்பட்டுள்ளார்.

காரைக்கால் கடற்கரை
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரை என்பது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லக்கூடிய இடமாகும்.. இவர்களை குறி வைத்தே, பணம் பறிப்பு, நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும் இங்கு நடப்பதுண்டு.. சிலசமயம் பாலியல் பலாத்காரமும் நடப்பதுண்டு..
அதனால்தான், இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவே, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடற்கரையில் கடலோர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காகவே, கடற்கரை பகுதியில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது.. இங்கு போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் கடற்கரைக்கு ஒரு காதல் ஜோடி வந்துள்ளது.. அப்போது ரோந்து பணியிலிருந்த ராஜ்குமார் என்ற போலீஸ்காரர், அந்த இளம் காதல் ஜோடியை தன்னுடைய போலீஸ் பூத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.
வாட்டர் பாட்டில் காதலன்
அப்போது திடீரென அருகிலுள்ள கடையில் சென்று வாட்டர் பாட்டில் வாங்கி வருமாறு காதலனை மட்டும் அனுப்பி வைத்துள்ளார்.. பிறகு இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது...
பிறகு அந்த இளம்ஜோடி உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.. இதைக்கேட்டு அதிர்ந்த உறவினர்கள், நண்பர்கள் திரண்டு வந்து, சம்பந்தப்பட்ட போலீஸ் பூத்தை முற்றுகையிட்டனர்.. அப்போது போலீசாருக்கும் உறவினர்களுக்கும் வாக்குவாதம் முற்றி மிகப்பெரிய பிரச்சனையாகிவிட்டது..

சில்மிஷம் ராஜ்குமார் சஸ்பெண்ட்
இந்த சம்பவம் அப்போது சோஷியல் மீடியாவிலும் வீடியோவாக வைரலானது. இதன்பிறகே, கடற்கரையில் நடந்த சம்பவமே வெளி உலகுக்கு தெரியவந்ததுடன், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்ததையடுத்து, இந்த சம்பவம் நடந்த சில வாரங்களில் போலீஸ்காரர் ராஜ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. எனினும் இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அரசு வேலையே போச்சு
தற்போது இளம்பெண்ணிடம் ராஜ்குமார் பணம் கேட்டு மிரட்டியதுடன் சில்மிஷத்திலும் ஈடுபட்டது உண்மை என்று நிரூபணமாகியிருக்கிறது.. இதனால் ராஜ்குமாரை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
பெண்ணை சீண்டி சிஷ்மிஷம் செய்து, இன்று பொறுப்புள்ள அரசு வேலையையே இழந்துள்ளார் 35 வயது ராஜ்குமார்.. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications