Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 வருடமாகவே அவ்வவப்போது அக்கப்போர்தான்.. கர்நாடகத்து அரசியல் நாடகங்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கர்நாடக சபாநாயகர் அதிரடி... மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

    சென்னை: கர்நாடக மாநில அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுவது இன்றோ நேற்றோ நிகழும் ஒரு சம்பவம் அல்ல, மாறாக கடந்த 10 ஆண்டுகளில் அந்த மாநிலம் இப்படிப்பட்ட ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு நிலையைத்தான் கண்டு வருகிறது.

    நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ், பாஜக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. கர்நாடகா சட்டப்பேரவையில் உள்ள மொத்த எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 224. இதில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்களும், காங்கிரசுக்கு 79 எம்.எல்.ஏ.க்களும் ஜே.டி.எஸ்.க்கு 37 எம்.எல்.ஏ.க்களும் கிடைத்தனர். இதில் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் ஒரு கட்சி ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வந்தது.

    karnataka political turmoil continues for the last 10 years

    அதனால் தாங்கள் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று எடியூரப்பா கோரினார். பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க ஆளுநரும் தேவைக்கு அதிகப்படியான நாட்கள் வழங்கியிருந்தார். ஆனால் நீதிமன்றம் இதில் தலையிட்டதன் பேரில் எடியூரப்பாவால் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாமலே போனது. இதனால் அவர் பதவி விலகிவிட்டார். இந்த நிலையில்தான் 37 உறுப்பினர்களை கொண்ட ஜே.டி.எஸ்.-ம், 79 உறுப்பினர்களை கொண்ட காங்கிரசும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன.

    காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவளித்ததால் ஜே.டி.எஸ்.-ன் குமாரசாமி முதல்வரானார். ஆட்சியமைத்த அந்த நாள் முதல் பாஜக ஆட்சியை கலைக்க ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் ஆட்சியை கலைக்க பெரும் முயற்சி எடுத்து வந்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடிகள் ரூபாய் பேரம் பேசப்பட்டது என்று குமாரசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். அதோடு பாஜகவின் இந்த திரைமறைவு வேலைகளினால் "நான் எவ்வளவு நாள்கள் முதல்வராக இருக்கப் போகிறேன் என்று தெரியாது" என்று அடிக்கடி கூறி வந்தார். நிலைமை இப்படி நீடித்து கொண்டிருக்கையில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா படலம் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று ஒரு சுபயோக சுபதினத்தில் குமாரசாமி ஆட்சி கலைந்து விட்டது. கர்நாடகாவில் இப்படி ஆட்சி கலைவது இது முதல் முறையல்ல, ஆட்சிக் கவிழ்ப்பும் இது முதல் முறையல்ல.

    karnataka political turmoil continues for the last 10 years

    கடந்த 1999 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11 ம் தேதி ஆட்சிக்கு வந்த எஸ்.எம்.கிருஷ்ணா 2004 ம் ஆண்டு மே மாதம் 24 ம் தேதி வரை ஆட்சியில் இருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பின்னர் காங்கிரசும் ஜே.டி.எஸ்.-ம் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணிக்கு காங்கிரசின் தரம்சிங் தலைமை தாங்கினார். தரம்சிங் ஆட்சியமைப்பதற்கு தேவேகவுடா உடனடியாக ஒப்புக்கொண்டார். காரணம் இருவருக்குமிடையே நெருங்கிய நட்பு இருந்தது, ஒரு காரணம். இப்படி தரம்சிங் ஆட்சி அமைத்த சூழலில் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.

    இந்தக் குழப்பம் நீடித்து வந்ததால், ஜே.டி.எஸ்., காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் தரம்சிங் ஆட்சி கலைந்தது. 2004 ம் ஆண்டு மே மாதம் 28 ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற அவர் 20 மாதங்களில் தனது ஆட்சியை பறிகொடுத்து 2006 ம் ஆண்டு ஜனவரி 28 ம் நாள் ஆட்சியில் இருந்து இறங்கினார். பின்னர் ஜே.டி.எஸ்.-ம் பாஜக-வும் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணியில் இரு கட்சிகளுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்ப்பட்டது அதன்படி ஆட்சியின் முதல் பாதி அதாவது 20 மாதங்கள் ஜே.டி.எஸ்.-ன் குமாரசாமி முதல்வராக இருப்பது என்றும் அதன் பின் வரும் 20 மாதங்கள் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக இருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ஒப்பந்தப்படி 20 மாதங்கள் ஆட்சியில் தொடர்ந்தார். அதன் பின்னர் எடியூரப்பா ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார். அப்போது அமைச்சரவையை பங்கிட்டுக்கொள்வதில் பாஜகவுக்கும், ஜே.டி.எஸ்.க்கும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் எடியூரப்பாவின் ஆட்சி கலைந்தது. வெறும் ஏழே நாட்களில் எடியூரப்பாவின் ஆட்சிக் கலைந்தது. பின்னர் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது. பின்னர் 2008 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்றது. எடியூரப்பா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது எடியூரப்பா மீதான சுரங்க வழக்கு வேகம் பிடித்தது. இதில் தண்டனை பெற்ற எடியூரப்பா மூன்று ஆண்டுகள் 66 நாட்களில் முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார்.

    இதனையடுத்து பாஜகவின் சதானந்த கவுடா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சதானந்த கவுடா ஓராண்டை தாண்டி ஆட்சியில் நீடித்து வந்த நிலையில் அவரால் அவரது கட்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. இதனால் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக சதானந்த கவுடா பதவியில் இருந்து விலக நேரிட்டது. அவரை தொடர்ந்து பாஜகவில் இருந்து ஜெகதீஸ் ஷெட்டர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். 2012 ம் ஆண்டு ஜூலை 12 ம் தேதி முதல்வர் பொறுப்புக்கு வந்த ஜெகதீஸ் ஷெட்டர் 304 நாட்கள் பதவியில் இருந்தார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 2013 -ம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அவர் ஆட்சியின் ஐந்து ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்தார். அதன் பின்னர் 2018 ம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற சட்டபேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில்தான் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணியில் அமைந்த அரசை பாஜக ஆபரேஷன் லோட்டஸ் மூலம் கலைத்து விட்டது. இப்படியாக கடந்த 20 ஆண்டுகளில் கர்நாடகா 10 முதல்வர்களை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துள்ளது. என்றுதான் இந்த விளையாட்டுக்கு தீர்வோ!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+