பலிஆடு.. சின்னத்தம்பி போலீஸாவே இருந்திருக்கலாம்.. ஆடு மேய்க்ககூட அறிவு வேணும்: திமுக சிவசேனாதிபதி

கோவை சம்பவம் குறித்து முதல்வர் விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் சிவசேனாதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடு மேய்க்ககூட அறிவும், ஆற்றலும் வேண்டும்.. அதுகூட, அண்ணாமலைக்கு கிடையாது.. ஆட்டுக்குட்டியைகூட தன்னுடைய அரசியலுக்கு பயன்படுத்தி கொண்டவர்.. இவர் பேசாமல் காவல்துறையில் நல்லா இருந்திருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு, பாஜக இவரை பலிஆடாக பயன்படுத்தி விட்டதாகவே நான் நினைக்கிறேன்.." என்று திமுகவின் கார்த்திகேய சிவசேனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

மேலும், கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளதாகவும், இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை, தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை என்றெல்லாம் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

குண்டு வெடிப்பு நடந்து இத்தனை நாள் ஆகியும், தமிழக முதல்வர் இதுகுறித்து மக்களை சந்தித்து விளக்கம் தராதது என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. இந்நிலையில், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் தன்னுடைய கருத்துக்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.. அவர் நம்மிடம் சொன்னதாவது:

 நானே ராஜா நானே மந்திரி

நானே ராஜா நானே மந்திரி

அண்ணாமலையை அவரது கட்சிக்காரர்களே மதிக்கவில்லை.. கோவை எம்எல்ஏ திருமதி வானதி சீனிவாசன், நாங்கள் பந்த் செய்வோம் என்கிறார்.. முன்னாள் எம்பி சிபி ராதாகிருஷ்ணனும் பந்த் அறிவிக்கிறார்.. ஆனால், அண்ணாமலை கோர்ட்டுக்கு சென்று, பந்த் செய்யவில்லை என்கிறார்.. அண்ணாமலையை அவர் கட்சியிலேயே யாரும் மதிக்கவில்லை.. இவர் பேச்சை யாரும் பொருட்டாகவும் எடுத்துக் கொள்வதில்லை.. நானே ராஜா, நானே மந்திரி என்ற தான்தோன்றித்தனம்தான்.. பாஜகவுக்கு தான் மட்டுமே எல்லாமுமாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்..

 நாய் பேய்

நாய் பேய்

நிறைய பொய் சொல்கிறார், உண்மைக்கு புறம்பாக பேசுகிறார், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பது, பத்திரிகையாளர்களிடம் குரங்கு, நாய், பேய் என்று கத்துவது, இதையெல்லாம் பார்த்தால் அவர் ஏதோ மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.. அவர் எதிர்பார்த்த ஆதரவும் அவருக்கு தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை.. அதனால்தான் லீவு எடுத்துட்டு அமெரிக்காவுக்கு அனுப்பியிருப்பார்கள் போல.. இன்னும்கொஞ்ச நாள் லீவு தந்து, அவரை ரெஸ்ட் எடுக்க வைத்தால் நல்லா இருக்கும்..

டிஜிபி

டிஜிபி

முதல்வர் ஸ்டாலின், கோவை விவகாரம் ஏன் விளக்கம் தரவில்லை என்று கேட்கிறார்கள்.. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு எல்லா விஷயத்துக்கும் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அமைச்சர் பொறுப்பில் இருக்கிறார்கள்.. டிஜிபி இருக்கிறார், அதிகாரிகள் இருக்கிறார்கள்.. இவர்கள் எல்லாருமே அவைகளை பார்த்து கொள்வார்கள்.. சோஷியல் மீடியா காலம் இது, அண்ணாமலை கேட்கும் கேள்விக்கெல்லாம் முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..

 300 முறை பிரஸ்மீட்

300 முறை பிரஸ்மீட்

இத்தனை வருட காலத்தில் ஒருமுறை கூட செய்தியாளர்களையே சந்திக்காதவரை, ஒரு தலைவராக இவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. அதுக்கு பதிலாக, அவரது ஆட்சியையும், பெருமையையும் பேசிக் கொண்டு, அண்ணாமலை போன்றவர்கள் ஸ்டாலினை கேள்வி கேட்பது கேலிக்கூத்தாக உள்ளது.. இந்த ஒன்றரை வருட காலத்தில், 300 முறையாவது பிரஸ்மீட் நடத்தி, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருப்பார் முதல்வர்.. ஆனால், எட்டரை வருட காலமாக, ஒருமுறைகூட எந்த பத்திரிகையாளரையும் பிரதமர் மோடி சந்திக்கவில்லையே.. என்ன கேள்வியை கேட்டால், அது நமக்கே திரும்பி வரும் என்றுகூட யோசிக்காமல் அண்ணாமலை பேசுகிறார்.

 12 மணி நேரம்

12 மணி நேரம்

ஆளுநருக்கு தெரிந்ததெல்லாம் சனாதனம் மட்டுமே.. ஏன் அவரே என்ஐஏ குறித்த லெட்டர் அனுப்ப வேண்டியதுதானே? பரிந்துரை செய்ய வேண்டியதுதானே? தமிழக அரசுக்கும், தேசிய புலனாய்வு முகமைக்கும் கிடைக்க வேண்டிய ஆதாரங்கள், அண்ணாமலைக்கும், ஆளுநருக்கும் கிடைத்தது எப்படி? இந்த கேள்வியை ஆளுநரிடம் கேட்க வேண்டும்தானே.. குண்டுவெடித்து 12 மணி நேரத்தில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்கிறது தமிழக போலீஸ்.. இதை என்ஐஏவின் இன்ஸ்பெக்டரே பாராட்டுகிறார்.. மிக சிறப்பாக புலனாய்வு நடந்ததாக பாராட்டினார்.. இப்படி சூழலில் எதுக்காக முதல்வர் விளக்கம் சொல்லனும்? ஒருவேளை செய்தியாளர்கள், கோவை வெடிப்பு பற்றி முதல்வரிடம் கேள்வி கேட்டால், நிச்சயம் பதில் சொல்வார்.. பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லவே மாட்டார்..

 பக்குவப்பட்ட மண்

பக்குவப்பட்ட மண்

பாஜக ஒரு விஷயத்தில் தலையிட்டாலே அங்கே மதம்தான் இருக்கும்.. பாகிஸ்தான் + இஸ்லாம், தேசியம், இந்த 3 விஷயத்தை தாண்டி பாஜககாரர்கள் வேற ஏதாவது பேசிவிட முடியுமா? சிலிண்டர் விபத்தில் முபீன் இறந்துவிட்டார்.. தமிழகத்தில் யாராவது ஒரு கட்சியோ, அல்லது முபீன் சமுதாயத்தை சேர்ந்தவர்களோ, முபீனுக்கு ஆதரவாக கொடி பிடித்து நடப்பது, ஊர்வலம் போவது, முபீனை பாராட்டுவது, இப்படியெல்லாம் எங்காவது பேசி பார்த்திருக்கிறீர்களா? இது தமிழ்நாட்டின் பக்குவப்பட்ட மண் .. யாருமே தீவிரவாதத்தை எங்குமே ஆதரிக்க போவதில்லை.. எங்கள் மதம், எங்கள் இனம் என்று என்று யாருமே அவர்களை ஆதரிக்க போவதும் கிடையாது.. இதுதான் தமிழகத்துக்கும் பாஜக மண்ணுக்கும் உள்ள வித்தியாசம்..

 வோட் பேங்க்

வோட் பேங்க்

வோட் பாங்க்குக்காக, முதல்வர் கோவைக்கு வந்து ஆய்வு செய்யவில்லை என்கிறார்கள்.. எல்லாவற்றையுமே டிஆர்பிக்காகவோ, மீடியாவுக்காகவோ முட்டாள்தனமாக செய்யக்கூடியவர்கள் பாஜகவினர்.. ஒரு அறிவுள்ள, முதிர்ச்சியுள்ள, ஆற்றலும் 50 வருட கால அரசியலை சந்தித்த ஒருசில தலைவர்களில் முக ஸ்டாலினும் ஒருவர்.. எங்கள் தலைவர் என்பதற்காக இதை சொல்லவில்லை-. இந்த லெவலில் இப்படி ஒரு தலைவர் கிடையாது.. இப்படி ஒரு சம்பவம் கோவை போன்ற இடங்களில் நடக்கிறது என்றால், அங்கே முதல்வரின் பாதுகாப்பென்று சில விஷயங்களை பிரத்யேகமாக செய்ய வேண்டியது வரும்.. இது அவருக்கு நன்றாகவே தெரியும்,

சின்னத்தம்பி

சின்னத்தம்பி

கோவையில் நிகழ்ந்து வரும் பிரச்சனையை அதிகாரிகள் கவனிப்பார்களா? அல்லது முதல்வரை பாதுகாக்க செக்யூரிட்டியை பலப்படுத்தி கொண்டிருப்பார்களா? நேரடியாக சென்று, 2 குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டேன் என்பதைவிட, ஒரு லட்சம் குழந்தைகளுக்கு சாப்பாடு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்தான் முதல்வர்.. நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தபோது, நீ ஏன் கிட்ட போய் அந்த டவரை பார்க்கவில்லை என்று யாராவது அதிபரை கேட்டார்களா? இதுதான் அரசியல் முதிர்ச்சி..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+