கடைசியா அவர் சொன்ன வார்த்தை.. விமான சாகச நிகழ்ச்சியில்.. இறந்தவரின் மனைவி கண்ணீர்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்குச் சென்ற திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். கார்த்திகேயனின் உயிரிழப்பு குறித்து அவரது மனைவி சிவரஞ்சனியின் உருக்கமாகப் பேசியிருப்பது காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்த நிகழ்வு லிம்கா கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர். நேற்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 72 விமானங்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர். விமானப் படை வீரர்கள் வானில் பல வர்ண ஜாலங்களை நிகழ்த்தினர். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை வான் சாகசங்களை கண்டு வியந்தனர்.
இந்நிகழ்த்ச்சியைக் காண லட்டக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்ததால் சென்னை மாநகரம் முழுவதும் ஸ்தம்பித்தது. பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடந்து செல்வதற்கு கூட மக்கள் சிரமப்பட்டனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காவல்துறையும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
கூட்ட நெரிசலால் சுமார் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் கூட வர முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது அப்பகுதியில் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
இதில் பல பேர் மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை,அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கூட்டநெரிசலில் இறந்த திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்தார்.
கார்த்திகேயன் உயிரிழந்ததது தொடர்பாக அவரது மனைவி சிவரஞ்சனி கூறுகையில், "விமான சாகச நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு மதியம் 1.32 மணிக்கு என்னையும், குழந்தையையும் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு சென்றார். பார்க்கிங்கிற்கு சென்று வண்டியை எடுத்துக்கொண்டு வருகிறேன். நீயும் குழந்தையும் இங்கேயே இருங்கனு சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு அவரை என்னால் போனில் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. யாரையுமே தொடர்பு கொள்ளவே முடியவில்லை. நெட்வொர்க் சுத்தமாக இல்லை.
3.15 மணிக்கு தொடர்பு கொண்டபோது கணவரின் போனை எடுத்து ஒருவர் பேசினார். அப்போது, எதிரில் பேசியவர் எனது கணவர் மயங்கி விழுந்துள்ளதாகவும், வாந்தி எடுத்துள்ளதாகவும் கூறினார். அவர் லொகேஷன் அனுப்பியும் கூட என்னால் என் கணவர் இறந்த பகுதிக்கு எளிதில் செல்ல முடியவில்லை. குடித்துவிட்டு கிடப்பதாக நினைத்து ஒருவரும் அவருக்கு முதலுதவி கூட செய்யவில்லை. அங்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை என்று அப்பகுதியில் இருந்தவர்கள் கூறினர்.
என் கணவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எங்களை நிற்க சொல்லிவிட்டு பார்க்கிங் பகுதிக்கு அவரது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக சென்றார். அதற்குள் அவர் மயங்கி விழுந்துள்ளார். நாங்கள் அங்கு சென்றபோது அவரை ஆம்புலன்ஸில் வைத்திருந்தனர். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
என் கணவர் 100 சதவீதம் உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார். இதுபோன்று ஒரு சம்பவம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. இதில் இருந்து நாங்கள் எப்படி மீளப் போகிறோம் என்று தெரியவில்லை. எங்களுக்கு இரண்டு வயது குழந்தை உள்ளார். இனி என்னுடைய வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும். எங்களுக்கு அரசு நிதி உதவி அல்லது அரசு வேலை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications