கனிமொழியின் பாதிப் படத்தைப் போட்டு ரொம்ப நாளா குழப்பினார்களே.. உண்மையான படம் இதுதானாம்!

நடிகர் சிவகுமார் வரைந்த ஓவியங்களை கனிமொழி எம்பி தனது தந்தை கருணாநிதியுடன் நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனிமொழி இந்தியில் மொழி பெயர்ப்பதைப் பாரீர் என்ற தகவலுடன் ஒரு வைரஸ் போஸ்ட் பரவி வந்த நிலையில் அந்தப் படம் குறித்த உண்மையான விவரம் தெரிய வந்துள்ளது.

கனிமொழிக்கு ஓவியம் என்றால் மிகவும் பிரியம்... அவரும் ஒரு ஓவியராம் இது எத்தனை பேருக்கு தெரியும். 31 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவகுமாரின் வீட்டில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை தனது தந்தையும் அப்போதைய முதல்வருமான கருணாநிதியுடன் நேரில் சென்று ரசித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Karunanidhi and Kanimozhi visited at Sivakumar house on 1989 Viral photos

நடிகர் சிவக்குமார் மிகச்சிறந்த ஓவியர் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த ஓவியங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்று கனிமொழி விரும்பியதால் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற நடிகர் சிவகுமார் வீட்டிற்கு மகளோடும் நேரிலேயே சென்று விட்டார் கருணாநிதி. ஒவ்வொரு ஓவியமாக எடுத்து சிவக்குமார் விளக்க அதை ஆர்வத்தோடு ரசித்திருக்கிறார் கனிமொழி. இதனை நடிகர் சிவக்குமாரே கூறியுள்ளார்.

இந்த போட்டோ இப்போது வைரலாகி வருகிறது அதற்கான காரணம் இல்லாமல் இல்லை. விமான நிலையத்தில் இந்தியில் பேசாத காரணத்தால் இந்தியர்தானா என்று பாதுகாப்பு படை வீரர் கேள்வி எழுப்பியதாக அவர் போட்ட ட்வீட் பரபரப்பை பற்ற வைத்தது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவிக்க வழக்கம் போல கனிமொழிக்கு எதிரான பதிவுகளும் களமாடின.

Karunanidhi and Kanimozhi visited at Sivakumar house on 1989 Viral photos
Karunanidhi and Kanimozhi visited at Sivakumar house on 1989 Viral photos

மேலும் நீண்ட காலமாகவே இந்த புகைப்படத்தின் பாதியை மட்டும் எடுத்து, சுமார் 30 ஆண்டுகளுக்கு .....முன்பு 1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் விபி சிங் கலந்து கொண்ட தேசிய முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் தேவிலால் ஹிந்தியில் பேசினார். அவரது ஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த தலைவரின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார் அதுவேறு யாருமல்ல ஹிந்திக்கு எதிராக ரயிலே வராத தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த கருணாநிதியின், மகள் கனிமொழி. தலைவர் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது தொண்டரின் மகள் ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்து விடும். அவ்வளவு தான் பகுத்தறிவு என்று பதிவிட்டு இருந்தனர்.

இந்தப் புகைப்படத்தின் முழுப் படம்தான் இப்போது வெளியாகி வைரலாகியிருக்கிறது. அதாவது சிவக்குமார் வீட்டுக்கு தனது தந்தையுடன் கனிமொழி சென்ற படம்தான் ஒரிஜினல். மற்றபடி தேவிலால் பேச்சை கனிமொழி பெயர்த்ததாக கூறி வெளியான தகவலும் சரி, அந்தப் புகைப்படமும் சரி தவறானது என்று தெரிய வந்துள்ளது.

கருணாநிதி கதை வசனத்தில் நடிகர் சிவக்குமார் பாசப்பறவைகள் படத்தில் நடித்த போது அவரது வீட்டிற்கு கருணாநிதி சென்றிருக்கிறார். அப்போது நடிகர் சிவகுமார் தனது கையில் ஒரு ஓவியத்தை வைத்து விளக்கிக்கொண்டிருக்க அந்த ஓவியத்தை கருணாநிதியும், கனிமொழியும் ரசித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தைதான் சிவகுமாரை வெட்டி எடுத்து விட்டு பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+